கறுப்பர் கூட்டம் விவகாரத்தைத் தேவையில்லாமல் பெரிதுபடுத்தும் பா.ஜ.க! – அ.தி.மு.க குற்றச்சாட்டு

 

கறுப்பர் கூட்டம் விவகாரத்தைத் தேவையில்லாமல் பெரிதுபடுத்தும் பா.ஜ.க! – அ.தி.மு.க குற்றச்சாட்டு

கறுப்பர் கூட்டம் விவகாரத்தைத் தேவையில்லாமல் பா.ஜ.க பெரிதாக்கி வருவதாக அ.தி.மு.க மூத்த தலைவர் பொன்னையன் குற்றம்சாட்டியுள்ளார்.

கறுப்பர் கூட்டம் விவகாரத்தைத் தேவையில்லாமல் பெரிதுபடுத்தும் பா.ஜ.க! – அ.தி.மு.க குற்றச்சாட்டுதனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அ.தி.மு.க மூத்த தலைவர்களுள் ஒருவரும் தமிழக திட்டக்குழு துணைத் தலைவருமான பொன்னையன் பங்கேற்றுப் பேசினார். அப்போது, “தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், ஆதாரத்தோடு நிரூபிக்கப்படும்போது தக்க தண்டனை அந்த குற்றவாளிகளுக்கு வழங்கப்படும். மத நல்லிணக்கத்துக்கு எதிராக செயல்பட்ட குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதில் தமிழக முதலமைச்சர் கடுமையான கண்டிப்பான நடவடிக்கை எடுத்து வருகிறார்.

நடவடிக்கையை அரசு நியாயமாக ஆதாரத்தின் அடிப்படையில் எடுக்கிறது.
ஆனால் தமிழக பா.ஜ.க-வை சேர்ந்த சிலர் அரசு எடுத்த நடவடிக்கை இன்னும் கடுமையானதாக, அதிகமாக இருக்க வேண்டும் என்று கூறி, ஆளும் கட்சியான அ.தி.மு.க-வை கேவலமான முறையில் பேசியிருப்பது வருந்தத்தக்கது. யூகங்கள் அடிப்படையில், உள்நோக்கத்தில் பேசுவது ஏற்புடையது இல்லை.
தமிழக பா.ஜ.க தலைவர்கள் ஏதோ உள்நோக்கம் வைத்து தமிழகத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.க-வுக்கு எதிராக பேசுவதாகறுப்பர் கூட்டம் விவகாரத்தைத் தேவையில்லாமல் பெரிதுபடுத்தும் பா.ஜ.க! – அ.தி.மு.க குற்றச்சாட்டுக சமூக ஊடகங்களில் நிறையக் கருத்துகள் வருகின்றன. இது பா.ஜ.க-வுக்கு பாதகமாக செல்லக்கூடும்.

கறுப்பர் கூட்டம் விவகாரத்தைத் தேவையில்லாமல் பெரிதுபடுத்தும் பா.ஜ.க! – அ.தி.மு.க குற்றச்சாட்டு
ஒவ்வொரு கட்சிக்கும் தனிக் கொள்கை உள்ளது. எங்களுக்கு தனிக் கொள்கை உண்டு. ரஜினிக்கும் தனிப்பட்ட கொள்கை உள்ளது. கொள்கை அடிப்படையில் சொல்கிறார்கள், பேசுகிறார்கள்… நாங்களும் எங்கள் கொள்கை அடிப்படையில் செயல்படுகிறோம். எந்த ஒரு கட்சியும் கூட்டணிக்கு வர வேண்டும் என்று எந்த காலத்திலும் அ.தி.மு.க நினைத்தது இல்லை. அம்மா ஆட்சிக் காலத்தில் தனித்து நின்று வெற்றி பெற்றோம். அளவு கடந்த பலம் கொண்ட கட்சி அ.தி.மு.கதான் என்பதை மக்கள் அறிவார்கள். யார் எங்களோடு இருந்தாலும், பிரிந்தாலும் அது அவர்கள் விருப்பம். எனவே, கொள்கை அடிப்படையில் கட்சி நடத்திக்கொள்ளட்டும். அதற்காக கறுப்பர் கூட்டம் தொடர்பான விஷயத்தை இவ்வளவு பெரிதுபடுத்தி சர்ச்சைக்குரியதாக ஆக்குவது சரியில்லை” என்றார்.