தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது பா.ஜ.க-தான்… ஜே.பி.நட்டாவுக்கு காங்கிரஸ் பதிலடி

 

தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது பா.ஜ.க-தான்… ஜே.பி.நட்டாவுக்கு காங்கிரஸ் பதிலடி


தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது பாரதிய ஜனதா கட்சிதான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக பா.ஜ.க செயற்குழு கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் பேசிய பாரதிய ஜனதா தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, தமிழகத்தின் வளர்ச்சிக்கு தி.மு.க தடையாக உள்ளது என்று கூறியிருந்தார். இதற்கு தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தரப்பில் ஜே.பி.நட்டாவுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது பா.ஜ.க-தான்… ஜே.பி.நட்டாவுக்கு காங்கிரஸ் பதிலடி

“இந்தியாவிலேயே பா.ஜ.க. செல்வாக்கு இழந்த முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. இதைச் சகித்துக் கொள்ள முடியாத ஜே.பி. நட்டா, ஆத்திரத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறியிருக்கிறார். தமிழகம் மிக நீண்ட பாரம்பரியம், கலாச்சாரத்தைப் பெற்றிருப்பதாக மேலும் கூறியிருக்கிறார். எவற்றையெல்லாம் பா.ஜ.க. பறித்து வருகிறதோ, அவற்றின் பெருமைகளை குறித்து பேசுவதற்கு பா.ஜ.க. தலைவருக்கு என்ன உரிமை இருக்கிறது? பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் தமிழக மக்களை பாதிக்கிற திட்டங்களை தொடர்ந்து திணித்து வருகிறது. தமிழகத்தின் தனித்தன்மையையும், அடையாளத்தையும் அழித்து வருகிறது.

தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது பா.ஜ.க-தான்… ஜே.பி.நட்டாவுக்கு காங்கிரஸ் பதிலடி


தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்காமல் 2 ஆண்டுகளாக பா.ஜ.க. அரசு முடக்கி வைத்திருக்கிறது. வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வை நடத்தியே தீருவோம் என்று பா.ஜ.க. அரசு தீவிரம் காட்டி வருகிறது. நீட் தேர்வு நடத்தப்பட்டால் தமிழகத்திலுள்ள ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். நீட் தேர்வுக்காக தமிழக அரசு நடத்த வேண்டிய பயிற்சி வகுப்புகள் நடப்பாண்டில் நடத்தப்படவில்லை. இந்நிலையில், நீட் தேர்வு நடத்துவது தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவுகள் நொறுங்கி போகிற நிலையை ஏற்படுத்துவதாகும். இதற்கு நீட் தேர்வை திணிக்கிற பா.ஜ.க. அரசும், அதைத் தடுக்கத் தவறிய அ.தி.மு.க. அரசும் தான் காரணமாகும்.

தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது பா.ஜ.க-தான்… ஜே.பி.நட்டாவுக்கு காங்கிரஸ் பதிலடி


மத்திய பா.ஜ.க. அரசில் இந்தியாவின் பன்முகத்தன்மையை முற்றிலும் புறக்கணித்து ஒற்றைக் கலாச்சாரத்தைப் புகுத்தி அதன் மூலம் 136 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒற்றை ஆட்சி முறையை நடைமுறைப் படுத்தி வருகிறது. புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் அறிக்கை போன்றவற்றில் மாநில அரசுகளுக்கு எந்த பங்கும் இல்லை. பொதுப்பட்டியலிலுள்ள கல்வி குறித்து மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்கப்படவில்லை.

தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது பா.ஜ.க-தான்… ஜே.பி.நட்டாவுக்கு காங்கிரஸ் பதிலடி

கல்வியைப் பொறுத்தவரையில், பெரும்பங்கு நடைமுறைப் படுத்துவது மாநில அரசுகள்தான். அதை புதிய கல்விக் கொள்கையின் மூலமாக, மாநில அரசின் உரிமையை மத்திய அரசு பறித்திருக்கிறது. இதை எதிர்க்கிற துணிவு தமிழக முதலமைச்சர் எடப்பாடிக்கு இல்லை.

தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது பா.ஜ.க-தான்… ஜே.பி.நட்டாவுக்கு காங்கிரஸ் பதிலடி


எனவே, தமிழக மக்களால் வெறுக்கப்படுகிற கட்சியாக பா.ஜ.க. இருக்கும் நிலையில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை விமர்சனம் செய்வதற்கு தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவிற்கு எந்த உரிமையும் இல்லை. ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை, மத்திய, மாநில அரசுகள் தான் செய்யமுடியும். அதில் குறைகள் இருந்தால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யும். ஆனால், தமிழக எதிர்க்கட்சிகள் மாநிலத்தின் வளர்ச்சியை தடுப்பதாகக் கூறுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளமுடியாத அர்த்தமற்ற வாதமாகும். இத்தகைய வாதத்தை முன்வைத்து மக்களின் கவனத்தை திசை திருப்புகிற முயற்சியில் ஈடுபட்டுகிற பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டாவை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.