“ஆர்.எஸ்.பாரதி கைது வரவேற்கத்தக்கது; அடுத்து தயாநிதிமாறன்” : ஹெச். ராஜா ட்வீட்!

ரூ.200 கோடி ஊழல் நடந்துள்ளதாக துணை முதல்வர் மீது புகார் அளித்திருந்தேன். யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

- Advertisement -

கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி திமுக இளைஞரணி சார்பில் அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நீதிபதிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்தும் திமுகவின் அமைப்புசெயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ் பாரதி சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாக தெரிகிறது.

- Advertisement -

- Advertisement -

இதுகுறித்து ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண்குமார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆர். எஸ். பாரதி இன்று அதிகாலை சென்னை ஆலந்தூரில் உள்ள தனது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து கூறியுள்ள ஆர். எஸ. பாரதி, “கோவையில் கொரோனா தடுப்பு பொருட்கள் வாங்கிய விவகாரத்தில் ரூ.200 கோடி ஊழல் நடந்துள்ளதாக துணை முதல்வர் மீது புகார் அளித்திருந்தேன். யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

இந்நிலையில் ஆர். எஸ். பாரதி கைது குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில், “திமுக அமைப்பு செயளாலர் ஆர்.எஸ்.பாரதி கைது. வரவேற்கத்தக்கது. அடுத்து தயாநிதிமாறன் in Waiting list?” என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisment -

Most Popular

கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 நாளில் 1 லட்சத்திலிருந்து 2 லட்சமாக எகிறியது….

2019 இறுதியில் சீனாவில் உருவான தொற்று நோயான கொரோனா வைரஸ் மெல்ல மெல்ல மற்ற நாடுகளிலும் பரவ தொடங்கியது. நம் நாட்டில் கடந்த ஜனவரியில் இறுதியில் கேரளாவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது...

மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை நீக்கம்…. வடகிழக்கு மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

வடகிழக்கில் உள்ள 7 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் இறுதி வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்து வந்தது. ஆனால் கடந்த மாதம் 4ம் தேதியன்று மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து...

மகாராஷ்டிராவிலிருந்து மக்கள் வருவதை தடுக்க எல்லையில் கண்காணிப்பை தீவிர படுத்திய கர்நாடக அரசு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கர்நாடக அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களிலிருந்து...

ரயில்களில் முன்பதிவு: ரூ.1885 கோடி திருப்பி தரப்பட்டுள்ளது – இந்திய ரயில்வே

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் போக்குவரத்து சேவை...