திமுக என்றாலே கூட்டுக் கொள்ளை; இதுதான் விடியலா? : ஹெச்.ராஜா ட்வீட்!

திமுக என்றாலே கூட்டுக் கொள்ளை; இதுதான் விடியலா? : ஹெச்.ராஜா ட்வீட்!

520 திமுக என்றாலே சிமெண்ட் கார்ட்டல் கூட்டுக் கொள்ளை என்று ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.

திமுக என்றாலே கூட்டுக் கொள்ளை; இதுதான் விடியலா? : ஹெச்.ராஜா ட்வீட்!

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கட்டுமான பொருட்களின் விலை 20% முதல் 30% வரை உயர்ந்துள்ளது. ரூ.370 ஆக இருந்த ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.520 ஆகவும், ஒரு டன் ஸ்டீல் கம்பி ரூ.68,000 ரூபாயிலிருந்து ரூ.75,000 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இதனால் தமிழக அரசு விலை நிர்ணயக்குழுவை அமைக்க வேண்டும் என கட்டுமான பொறியாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.இதற்கு ஓபிஎஸ், ராமதாஸ் உள்ளிட்டவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

திமுக என்றாலே கூட்டுக் கொள்ளை; இதுதான் விடியலா? : ஹெச்.ராஜா ட்வீட்!

இந்நிலையில் பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளரான ஹெச்.ராஜா, மே 2 அன்று சிமெண்ட் 1 மூட்டை 380. இன்று 520 திமுக என்றாலே சிமெண்ட் கார்ட்டல் கூட்டுக் கொள்ளை என்பது நிருபணம்.30 நாட்களில் மூட்டைக்கு 140 ரூபாய் விலையேற்றம். ஆனால் இதுதான் விடியலா என்று ஊடகங்கள் ஏன் விவாதிக்கவில்லை. மக்களை கொள்ளையடிக்கும் ஆட்சிக்கு துதிபாடுவதுதான் ஊடக தர்மமா? என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.