கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தலில் போட்டி… 9 பேரை 6 ஆண்டுகளுக்கு கட்சியலிருந்து வெளியேற்றிய பா.ஜ.க.

கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தலில் போட்டி… 9 பேரை 6 ஆண்டுகளுக்கு கட்சியலிருந்து வெளியேற்றிய பா.ஜ.க.

பீகாரில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூடடணிக்கு எதிராக மாற்று கட்சி வேட்பாளராக களம் இறங்கிய தற்போதைய எம்.எல்.ஏ. உள்பட 9 பேரை கட்சியலிருந்து 6 ஆண்டுகளுக்கு பா.ஜ.க. வெளியேற்றியுள்ளது.

பீகார் சட்டப்பேரவை தேர்தல் மொத்தம் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு இம்மாதம் 28ம் தேதி தொடங்குகிறது. பீகார் சட்டப்பேரவை தேர்தலை பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து இந்த தேர்தலை சந்திக்கின்றன. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதது என்ற எண்ணத்தில் அந்த இரண்டு கட்சிகளை சேர்ந்த பல தலைவர்கள் சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி உள்ளிட்ட பிற கட்சிகளில் இணைந்தனர்.

கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தலில் போட்டி… 9 பேரை 6 ஆண்டுகளுக்கு கட்சியலிருந்து வெளியேற்றிய பா.ஜ.க.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள்

இந்த சூழ்நிலையில், பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக லோக் ஜன்சக்தி உள்ளிட்ட பிற கட்சி வேட்பாளராக களம் இறங்கும் தனது கட்சியை சேர்ந்த 9 அதிருப்தி தலைவர்களை பா.ஜ.க. 6 ஆண்டுகள் கட்சியிலிருந்து வெளியேற்றி உள்ளது. பா.ஜ.க. கட்சியிலிருந்து வெளியேற்றிய 9 பேரில் தற்போதைய எம்.எல்.ஏ. ஒருவரும் அடங்குவார்.

கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தலில் போட்டி… 9 பேரை 6 ஆண்டுகளுக்கு கட்சியலிருந்து வெளியேற்றிய பா.ஜ.க.
லோக் ஜன்சக்தி

பீகார் மாநிலம் ஜாஜா சட்டப்பேரவை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருக்கும் பா.ஜ.க.வின் ரவிந்திர யாதவ், லோக் ஜன்சக்தி கட்சி சார்பில் அந்த தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இதனையடுத்து ரவிந்திர யாதவை பா.ஜ.க. கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கியுள்ளது. பா.ஜ.க. கட்சியிலிருந்து வெளியேற்றிய 9 பேரில் 8 பேர் லோக் ஜன்சக்தி சார்பில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக நிற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க.விலிருந்து வெளியேற்றப்பட்ட அஜய் பிரதாப் ஆர்.எல்.எஸ்.பி. கட்சி வேட்பாளராக களம் இறங்குகிறார்.