விவசாயிகள் குறித்த சுர்ஜேவாலாவின் கருத்துக்கு சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.. பா.ஜ.க.

விவசாயிகள் குறித்த சுர்ஜேவாலாவின் கருத்துக்கு சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.. பா.ஜ.க.

விவசாயிகள் குறித்த சுர்ஜேவாலாவின் கருத்துக்கு சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தோஹாவில் தலிபான்களுடன் மத்திய அரசு பேசும்போது, ஏன் அவர்களால் (மத்திய அரசு) விவசாயிகளுடன் விவாதிக்க முடியவில்லை.விவசாயிகள் டெல்லி எல்லையில் 10 மாதங்களாக அமைதியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பா.ஜ.க. தலைமையிலான அரசு நாட்டின் விவசாய வளங்களை விற்பனை செய்ய விரும்புகிறது. விவசாயிகள் தமக்காக மட்டுமல்ல நாட்டுக்காகவும் போராடுகிறார்கள் என்று தெரிவித்தார்.

விவசாயிகள் குறித்த சுர்ஜேவாலாவின் கருத்துக்கு சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.. பா.ஜ.க.
ரன்தீப் சிங் சுர்ஜேவாலா

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை ஒப்பீடு செய்த சுர்ஜேவாலாவின் அறிக்கைக்கு சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறியதாவது: மத்தியிலும் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள பா.ஜ.க. அரசுகள் விவசாயிகளின் பிரகாசமான எதிர்காலத்துக்காக உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இங்கு காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களும் விவசாயிகளை தலிபானி என்று அழைக்கின்றனர்.

விவசாயிகள் குறித்த சுர்ஜேவாலாவின் கருத்துக்கு சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.. பா.ஜ.க.
ராகுல் காந்தி

இந்த அறிக்கைக்கு அனைத்து விவசாயிகள் மற்றும் இந்திய குடிமக்களிடம் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். பஞ்சாபின் மோகாவில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது தடியடி நடந்தபோது, திருதராஷ்டிரார் ராகுல் காந்தி எங்கே இருந்தார்?. காங்கிரஸ் இந்திய அரசியலின் சியர்லீடராக உள்ளது. விவசாயிகளின் தோள்களில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு காங்கிரஸ் தனது அரசியல் ரொட்டியை சமைக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.