வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைந்த ஸ்ருதி ஹாசன் : பாஜக பரபரப்பு புகார்!!

வாக்குச்சாவடிக்குள்  அத்துமீறி நுழைந்த ஸ்ருதி ஹாசன் : பாஜக பரபரப்பு புகார்!!

சட்டமன்ற தேர்தல் 234 தொகுதிகளுக்கும் நேற்று ஒரேகட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. தமிழகத்தில் காலை 7 மணியிலிருந்து மாலை 7 மணிவரை க 71.79% வாக்குகள் பதிவாகின. அதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக 78% வாக்குகளும், சென்னையில் 59.40% வாக்குகளும் பதிவாகின.

வாக்குச்சாவடிக்குள்  அத்துமீறி நுழைந்த ஸ்ருதி ஹாசன் : பாஜக பரபரப்பு புகார்!!

இந்த சூழலில் கோவை தெற்கு பாஜக மாவட்டத் தலைவர் நந்தகுமார் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தார். அந்த புகாரில், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் வாக்குச்சாவடியை பார்வையிட்டார். தேர்தல் நடந்து கொண்டிருக்கும் போது, கமல் ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் அத்துமீறி வாக்குச்சாவடிக்குள் நுழைந்தார்.

வாக்குச்சாவடிக்குள்  அத்துமீறி நுழைந்த ஸ்ருதி ஹாசன் : பாஜக பரபரப்பு புகார்!!

வேட்பாளர், அங்கீகரிக்கப்பட்ட கட்சி முகவர்களை தவிர்த்து வாக்குச்சாவடிகளுக்குள் யாரும் செல்லக்கூடாது என்பது தேர்தல் நடத்தை விதிமுறை. இதை மீறி ஸ்ருதிஹாசன் வாக்குச்சாவடிக்குள் வந்தது குற்றம். எனவே, ஸ்ருதிஹாசன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முன்னதாக கமல் ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மகள்களுடன் வந்து வாக்கை செலுத்தினார்.