பாஜக வேட்பாளர்கள் குஷ்பு, ஹெச்.ராஜா பின்னடைவு!

 

பாஜக வேட்பாளர்கள் குஷ்பு, ஹெச்.ராஜா  பின்னடைவு!

ராஜபாளையம் தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க பாண்டியன் முன்னிலை வகிக்கிறார். அதிமுக வேட்பாளர் ராஜேந்திர பாலாஜிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தங்க பாண்டியன் 4516 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 2016 வாக்குகள் பெற்றுள்ளார்.

பாஜக வேட்பாளர்கள் குஷ்பு, ஹெச்.ராஜா  பின்னடைவு!

திருவொற்றியூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சங்கர் தொடந்து முன்னிலயில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் சீமான் பின்னடைவு.ஆவடி தொகுதியில் திமுக வேட்பாளர் நாசர் முன்னிலை ; அதிமுக வேட்பாளர் மா.பாண்டியராஜனுக்கு பின்னடைவு. அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் இளங்கோ முன்னிலை வகிக்கும் நிலையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.சென்னை எழும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமன் முன்னிலையில் உள்ளார். இவர் அதிமுக வேட்பாளர் ஜான் பாண்டியனை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

பாஜக வேட்பாளர்கள் குஷ்பு, ஹெச்.ராஜா  பின்னடைவு!

சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் குஷ்புவுக்கு பின்னடைவை சந்தித்துள்ளார்.எழிலன் 3330 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், குஷ்பு 1393 வாக்குகள் பெற்றுள்ளார்.காரைக்குடியில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா பின்னடைவை சந்தித்துள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி 2805 வாக்குகள் பெற்றுள்ளார். ஹெச்.ராஜா 1393 வாக்குகள் பெற்றுள்ளார்.