‘சட்டமன்ற தேர்தலில் 40 தொகுதிகளை கேட்கும் பாஜக’ – அதிமுகவின் விருப்பம் என்ன?

‘சட்டமன்ற தேர்தலில் 40 தொகுதிகளை கேட்கும் பாஜக’ – அதிமுகவின் விருப்பம் என்ன?

2021 நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிடம் பாஜக 40 தொகுதிகளை கேட்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

‘சட்டமன்ற தேர்தலில் 40 தொகுதிகளை கேட்கும் பாஜக’ – அதிமுகவின் விருப்பம் என்ன?

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தேர்தல் பணியில் களமிறங்கியுள்ளன. கடந்த 2 முறையும் ஆட்சியை கைவிட்ட திமுக, இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என்பதற்காக இப்போதே தேர்தல் பரப்புரையை தொடக்கிவிட்டது. உட்கட்சி பிரச்னை, கூட்டணி மோதல் உள்ளிட்ட பல விவகாரங்களால் தேர்தல் பணியை தாமதமாக தொடங்கியிருக்கும் அதிமுக, நேற்று சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடனான கூட்டணியை உறுதிப்படுத்தியது.

‘சட்டமன்ற தேர்தலில் 40 தொகுதிகளை கேட்கும் பாஜக’ – அதிமுகவின் விருப்பம் என்ன?

மக்களவை தேர்தலில் அமைக்கப்பட்ட அதிமுக- பாஜக கூட்டணி சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என ஓபிஎஸ்சும் ஈபிஎஸ்சும், சென்னை வந்திருக்கும் அமித்ஷா முன்னிலையில் அறிவித்தனர். இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் 40 தொகுதிகளை வழங்க அதிமுகவுக்கு பாஜக கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூட்டணியில் 25 தொகுதிகள் மட்டுமே கொடுக்க அதிமுக விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. அமித்ஷாவுடன் நடந்த ஆலோசனையில் தொகுதிகள் பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பதை பேசி முடிவு எடுத்துக் கொள்ள அமித்ஷா அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.