“அதிக இடங்களை கேட்டு அழுத்தம் தரமாட்டோம்” : தமிழக பாஜக துணை தலைவர் அண்ணாமலை

“அதிக இடங்களை  கேட்டு அழுத்தம் தரமாட்டோம்” : தமிழக பாஜக துணை தலைவர் அண்ணாமலை

பாஜக – அதிமுக தொகுதி பங்கீடு குறித்து அக்கட்சியின் மாநில துணை தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.

வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன்- பாஜக கூட்டணி அமைத்துள்ளது உறுதியாகியுள்ளது. கடந்த மக்களவை தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன . இதில் பாமக ,தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கிறதா? என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் பாஜக – அதிமுக உடன் கூட்டணி அமைப்பது முடிவாகியுள்ளது. இருப்பினும் தொகுதி பங்கீடு , தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்டவை குறித்து இன்னும் அதிமுக தரப்பிலிருந்து எந்த பதிலும் அறிவிக்கப்படவில்லை.

“அதிக இடங்களை  கேட்டு அழுத்தம் தரமாட்டோம்” : தமிழக பாஜக துணை தலைவர் அண்ணாமலை

ஒருபுறம் பாமக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினால் மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி என நிபந்தனை விதித்துள்ள நிலையில் தேமுதிக 40சீட்கள் ஒதுக்கினால் கூட்டணி குறித்து பேச தயார் என்றும் தெரிவித்துள்ளது.

“அதிக இடங்களை  கேட்டு அழுத்தம் தரமாட்டோம்” : தமிழக பாஜக துணை தலைவர் அண்ணாமலை

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை, ” அதிக இடங்கள் கேட்டு அழுத்தம் கொடுக்காமல் குழப்பமின்றி இடங்களை கேட்டுப் பெறுவோம். மீண்டும் முதல்வர் பழனிசாமியை ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என்பதே எங்களின் முடிவு” என்றார்.