‘அதையெல்லாம் செய்ய விட மாட்டோம்’.. அதிமுக தேர்தல் வாக்குறுதிக்கு முட்டுக்கட்டை போடும் பாஜக!

‘அதையெல்லாம் செய்ய விட மாட்டோம்’.. அதிமுக தேர்தல் வாக்குறுதிக்கு முட்டுக்கட்டை போடும் பாஜக!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் பாஜகவுக்கு 20 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதற்கு முன்னதாகவே அதிமுக 3 கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டது. நேற்று தேர்தல் அறிக்கையும் வெளியானது.

‘அதையெல்லாம் செய்ய விட மாட்டோம்’.. அதிமுக தேர்தல் வாக்குறுதிக்கு முட்டுக்கட்டை போடும் பாஜக!

திமுகவின் தேர்தல் அறிக்கை அனைவரையும் திரும்பி பார்க்கும் வகையில் இருந்த நிலையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கையும் அதற்கு ஈடு கொடுக்கும் அளவிலேயே இருந்தது. இலவச வாஷிங் மெஷின், வீட்டில் ஒருவருக்கு அரசு பணி, சிஏஏ ரத்துக்கு வலியுறுத்தல் உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அதில் கொடுக்கப்பட்டிருந்தது. அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்துவோம் என உறுதியுளித்துள்ளன.

‘அதையெல்லாம் செய்ய விட மாட்டோம்’.. அதிமுக தேர்தல் வாக்குறுதிக்கு முட்டுக்கட்டை போடும் பாஜக!

சிஏஏ கொண்டுவரப்பட்ட நாள் முதலே திமுக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கிறது. ஆனால், அச்சட்டத்தால் தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறி வந்த அதிமுக இந்த வாக்குறுதியை கொடுத்திருப்பது திடீர் திருப்பமாக அமைந்துள்ளது. அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவினரை இந்த வாக்குறுதி அதிர்ச்சி அடையச் செய்தது.

‘அதையெல்லாம் செய்ய விட மாட்டோம்’.. அதிமுக தேர்தல் வாக்குறுதிக்கு முட்டுக்கட்டை போடும் பாஜக!

இந்த நிலையில், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, ஸ்டாலினால் மட்டுமல்ல.. வேறு யாரும் சிஏஏவை எதிர்க்க கூடாது. அது ரத்து செய்யப்படாது எனக் குறிப்பிட்டுள்ளார். தொகுதி பங்கீடு முடிந்ததில் இருந்து பாஜக தனது வேலையைக் காட்ட தொடங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.