5 மாநிலங்களில் அசாமை தட்டித்தூக்கிய பாஜக!

 

5 மாநிலங்களில் அசாமை தட்டித்தூக்கிய பாஜக!

தமிழகம், அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. அசாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 126 சட்டமன்றத் தொகுதிகளில், பாஜக 81 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 45 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

5 மாநிலங்களில் அசாமை தட்டித்தூக்கிய பாஜக!

இதன் காரணமாக ஆட்சியின் பெரும்பான்மைக்கு தேவையான 64 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை வகிப்பதால், அக்கட்சியே மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் அசாமில் பாஜக தான் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டது. அதையொட்டியே தேர்தல் முடிவுகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.