டெல்லியிலும் பரவிய பறவைக் காய்ச்சல்: 9 மாநிலங்கள் பாதிப்பு!

 

டெல்லியிலும் பரவிய பறவைக் காய்ச்சல்: 9 மாநிலங்கள் பாதிப்பு!

டெல்லியில் பறவைக் காய்ச்சல் பரவியிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் முதன் முதலில் பரவிய பறவைக் காய்ச்சல், தற்போது பிற மாநிலங்களிலும் தீவிரமாகி வருகிறது. பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவும் தன்மைக் கொண்டதால், இதன் தீவிரத்தை உணர்ந்த கேரள அரசு பறவைக் காய்ச்சலை பேரிடராக அறிவித்தது. கேரளாவில் இருந்து கோழிகள் உள்ளிட்ட பறவைகள் இறக்குமதிக்கு அண்டை மாநிலங்கள் தாற்காலிக தடை விதித்தன.

டெல்லியிலும் பரவிய பறவைக் காய்ச்சல்: 9 மாநிலங்கள் பாதிப்பு!

இதனிடையே, பறவைக் காய்ச்சல் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியதால் கோழி உள்ளிட்ட பறவை இறைச்சியின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அண்மையில், கொரோனா வைரஸால் கோழி விற்பனை பெருமளவு சரிந்ததைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் செத்து மடிந்த 8 காகங்களை பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததில் அவைகளுக்கு பறவைக் காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. கேரளா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், இமாசலப் பிரதேசம், ஹரியானா, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் உறுதியான நிலையில் தற்போது டெல்லியிலும் உறுதியாகி இருப்பதாக தெரிகிறது.