கோவாக்சின் போட்டுக் கொண்ட அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு எப்படி? பயோடிக் நிறுவனம் விளக்கம்!

கோவாக்சின் போட்டுக் கொண்ட அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு எப்படி? பயோடிக் நிறுவனம் விளக்கம்!

கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட ஹரியானா அமைச்சருக்கு கொரோனா உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது குறித்து பயோடிக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

கோவாக்சின் போட்டுக் கொண்ட அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு எப்படி? பயோடிக் நிறுவனம் விளக்கம்!

கொரோனா வைரஸுக்கு எதிராக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும், பாரத் பயோ டெக் நிறுவனமும் இனைந்து உருவாக்கிய தடுப்பூசி கோவாக்சின். இதன் 2 கட்ட பரிசோதனைகள் வெற்றி அடைந்த நிலையில், கடந்த நவம்பர் மாதமே 3ம் கட்ட பரிசோதனை தொடங்கியது. அப்போது, ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜி கோவாக்சின் மருந்தை செலுத்திக் கொண்டார். அவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு 2 வாரங்கள் ஆகியிருக்கும் நிலையில் தற்போது கொரோனா உறுதியாகி இருப்பதாக அனில் விஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவாக்சின் போட்டுக் கொண்ட அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு எப்படி? பயோடிக் நிறுவனம் விளக்கம்!

கோவாக்சின் மருந்து செலுத்தியும் அவருக்கு கொரோனா உறுதியானது தற்போது மக்கள் மத்தியில், கோவாக்சின் மீதான சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்த பயோடிக் நிறுவனம், ‘கோவேக்சின் தடுப்பூசி இரண்டு டோஸ் எடுத்துக் கொள்ளும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் டோஸ் செலுத்தப்பட்டு 28 நாட்கள் ஆன பிறகே இரண்டாவது டோஸ் போடப்படும். இரண்டு டோஸையும் எடுத்துக் கொண்டால் தான் கோவாக்சின் பலன் தரும்’ என தெரிவித்துள்ளது. முன்னதாக சென்னையை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா பரிசோதனையில் உடல் உபாதைகள் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.