திரைப்படமாகிறது வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு- வின் வாழ்க்கை வரலாறு!

“மாவீரன் காடுவெட்டியார்” தமிழ்த்தாய் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பெரிய பொருட்செலவில் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ‘காடுவெட்டி ஜெ.குரு’ வின் வாழ்க்கை வரலாற்றை “மாவீரன் காடுவெட்டியார்” என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கிறார்கள்.

ஜெ. குரு வின் குடும்பத்தார் சம்மதம் தெரிவித்ததோடு, எடுக்கப்படும் இப்படத்தில், முன்னணி நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பணியாற்றுக்கின்றனர். ஜெ.குரு- வின் வாழ்க்கை வரலாறு படம் உருவான தகவலை கேட்ட அவரின் ஆதரவாளர்கள் மிகுந்த மனமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

kaduvetti j guru

காடுவெட்டி ஜெ. குரு வின் மகன் கனலரசன் மேற்பார்வையில் கதைக் களம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை இளம் இயக்குனர் ஒருவர் இயக்குவதாகவும், அனைத்து சமூகத் தலைவர்களும் இப்படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் பி.ஆர்.ஓ சிவா தெரிவித்துள்ளார். சூழ்ச்சியையும் பகையையும் வீழ்த்தி வாகை சூடும் வகையில் கதை அமைப்புடன் “மாவீரன் காடுவெட்டியார்” படத்தை படக்குழுவினர் உருவாக்கிவருகின்றனர்.

Most Popular

நான் அதிருப்தியிலும் இல்லை; பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை- திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்

திமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். திமுகவிலிருந்து ஏராளமான எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு செல்லவிருப்பதாகவும், திமுக தலைமையை சிலர் ஏற்கவில்லை என்றும் தகவல்கள் கசிந்தது. மேலும் தலைவர்...

65 ஆண்டு கால வரலாற்றில் பவானிசாகர் அணை 26 வது முறையாக 100 அடியை எட்டியது!

1956ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட பவானிசாகர் அணை, கடந்த 65 ஆண்டு கால வரலாற்றில் 26 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. 2018, 2019 மற்றும் 2020 என தொடர்ந்து 3 ஆண்டுகள்...

போதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி!

குடிபோதையில் தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சேலம் மாவட்டம் ஓமலூரில் நிகழ்ந்துள்ளது. பெரியேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் போதைக்கு அடிமையான நிலையில் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில்...

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கேரளாவின் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, காசர்கோடு கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில்...