மகாராஷ்டிராவை காப்பாற்ற களம் இறங்கிய முகேஷ் அம்பானி.. இலவசமாக ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை

மகாராஷ்டிராவை காப்பாற்ற களம் இறங்கிய முகேஷ் அம்பானி.. இலவசமாக ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ஜாம்நகர் ஆலையிலிருந்து மகாராஷ்டிராவுக்கு ஆக்சிஜன் சிலிண்டரை இலவசமாக சப்ளை செய்ய தொடங்கியுள்ளது.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் 2வது அலை தீவிரமாக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மகிவும் கடுமையாக உள்ளது. அங்கு நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் மகாராஷ்டிரா மருத்துவமனைகளில் கோவிட் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவை காப்பாற்ற களம் இறங்கிய முகேஷ் அம்பானி.. இலவசமாக ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை
ஆக்சிஜன் சிலிண்டர்

மேலும் ஆக்சிஜன் சிலிண்டருக்கான தேவையும் அதிகரித்துள்ளதால், ஆக்சிஜன் சிலிண்டருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், இந்தியாவின் மெகா கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி, தனது சுத்திகரிப்பு நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன், கொடூரமான கொரோனா வைரஸ் பிடியில் சிக்கி தவிக்கும் மகாராஷ்டிராவுக்கு இலவசமாக அனுப்ப தொடங்கியுள்ளார்.

மகாராஷ்டிராவை காப்பாற்ற களம் இறங்கிய முகேஷ் அம்பானி.. இலவசமாக ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை
ஏக்நாத் ஷிண்டே

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள தனது சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மகாராஷ்டிராவுக்கு ஆக்சிஜன் சிலிண்டரை இலவசமாக சப்ளை செய்ய தொடங்கியுள்ளது என அந்நிறுவனத்தின் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், மகாராஷ்டிரா நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே டிவிட்டரில், ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து 100 டன்கள் கியாஸ் (ஆக்சிஜன்) மாநிலம் பெறும் என பதிவு செய்து இருந்தார்.