மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல்… பா.ஜ.க-வுக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு!

 

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல்… பா.ஜ.க-வுக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு!

மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐக்கிய ஜனதா தள வேட்பாளருக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு தெரிவித்துள்ளது

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல்… பா.ஜ.க-வுக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு!

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ஹரிவன்ஷ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மனோஜ் ஜா போட்டியிட வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அவரை காங்கிரஸ் கட்சி பொது வேட்பாளராக அறிவிக்கவில்லை. அதே நேரத்தில் சிவசேனா உள்ளிட்ட 12 கட்சிகள் மனோஜ் ஜாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல்… பா.ஜ.க-வுக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு!


தற்போதைய நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெற கூடுதலாக ஆறு வாக்குகள் மட்டுமே தேவை என்ற நிலை இருந்தது. பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை ஆதரிக்கும் என்று கூறப்பட்டன. அதன்படி பிஜூ ஜனதா தளம் தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளது.

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல்… பா.ஜ.க-வுக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு!


இன்று நடைபெற உள்ள துணைத் தலைவர் தேர்தலில் பிஜூ ஜனதா தளம் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவர் பிரசன்னா ஆச்சரியா தெரிவித்துள்ளார். இதன் மூலம், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஹரிவன்ஷ் வெற்றி உறுதியாகி உள்ளது.