சாதி அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பை பீகார் அரசே சொந்த செலவில் எடுக்கலாம்.. பச்சை கொடி காட்டிய பா.ஜ.க.

சாதி அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பை பீகார் அரசே சொந்த செலவில் எடுக்கலாம்.. பச்சை கொடி காட்டிய பா.ஜ.க.

பீகாரில் சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநில அரசே சொந்த செலவில் எடுக்கலாம் என்று அம்மாநில துணை முதல்வர் ரேணு தேவி தெரிவித்தார்.

நம் நாட்டில் தற்போது சில மாநில அரசுகள் சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றன. குறிப்பாக பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசும், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியும் சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

சாதி அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பை பீகார் அரசே சொந்த செலவில் எடுக்கலாம்.. பச்சை கொடி காட்டிய பா.ஜ.க.
நிதிஷ் குமார்

2019 பிப்ரவரி 18 மற்றும் 2020 பிப்ரவரி 27ம் தேதிகளில் பீகார் சட்டப்பேரவையில் சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது குறித்து மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது. இந்த சூழ்நிலையில், சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை பீகார் அரசே சொந்த செலவில் எடுக்கலாம் என்று பீகார் பா.ஜ.க. தெரிவித்துள்ளது.

சாதி அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பை பீகார் அரசே சொந்த செலவில் எடுக்கலாம்.. பச்சை கொடி காட்டிய பா.ஜ.க.
ரேணு தேவி

பீகார் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அம்மாநில துணை முதல்வருமான ரேணு தேவி கூறுகையில், கர்நாடகா மற்றும் ஓடிசா அரசாங்கங்கள் தங்கள் சொந்த செலவில் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியுள்ளன. இதை (சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு) தேர்ந்தெடுப்பதில் பீகார் அரசாங்கத்துக்கும் சுதந்திரம் உள்ளது. இருப்பினும், நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கூடாது என்ற தெளிவான நிலைப்பாட்டை மத்திய அரசு கொண்டுள்ளது.