பீகாரில் திறந்த ஒரு மாதத்துக்குள் இடிந்து விழுந்த பாலம்.. முதல்வர் நிதிஷ் குமாரை வறுத்தெடுக்கும் எதிர்க்கட்சிகள்

பீகாரில் திறந்த ஒரு மாதத்துக்குள் இடிந்து விழுந்த பாலம்.. முதல்வர் நிதிஷ் குமாரை வறுத்தெடுக்கும் எதிர்க்கட்சிகள்

பீகாரில் கிழக்கு சம்பாரனின் பல்வேறு நகரங்களுக்கும், கோபால்கஞ்ச், சிவான் மற்றும் சரண் மாவட்டங்களுக்கு இடையிலான சாலை தூரத்தை குறைக்கும் நோக்கில், கந்தக் ஆற்றில் சத்தர்காட் பாலம் கட்டப்பட்டது. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த பாலை அண்மையில்தான் முடிவடைந்தது. கடந்த ஜூன் 16ம் தேதியன்றுதான் இந்த பாலத்தை முதல்வர் நிதிஷ் குமார் திறந்து வைத்தார். சுமார் ரூ.264 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்த பாலம் திறக்கப்பட்ட 29 நாட்களில் இடிந்து விழுந்தது. புதிதாக கட்டப்பட்ட பாலம் ஒரு மாதத்துக்குள் இடிந்து விழுந்தது அம்மாநில அரசுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அதேசமயம் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தை வைத்து முதல்வர் நிதிஷ்குமாரை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடின.

பீகாரில் திறந்த ஒரு மாதத்துக்குள் இடிந்து விழுந்த பாலம்.. முதல்வர் நிதிஷ் குமாரை வறுத்தெடுக்கும் எதிர்க்கட்சிகள்

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் இது தொடர்பாக டிவிட்டரில், 8 ஆண்டுகளில் ரூ.263.47 கோடி செலவில் கோபால்கஞ்சின் சத்தர்காட் பாலம் ஜூன் 16ம் தேதி அன்று நிதிஷ் ஜி அவர்களால் திறக்கப்பட்டது. எச்சரிக்கை! நிதிஷ் ஜீ ஊழல் செய்தார் என்றால். ரூ.263 கோடி ஒரு பார்வைக்கு மட்டுமே. அவர்களின் எலிகள் கூட இந்த அளவுக்கு மதுவை உட்கொள்கின்றன என பதிவு செய்து இருந்தார். பீகார் காங்கிரஸ் தலைவர் டாக்டர் மதன் மோகன் டிவிட்டரில், ஜூன் 16ம் தேதியன்று ரூ.263.47 கோடி செலவில் கட்டப்பட்ட பாலத்தின் திறப்பு மற்றும் ஜூலை 15 அன்று அதன் அழிவு. இந்த முறை ஏழை எலிகளின் மீது குற்றம் சாட்டம் வேண்டாம் என பதிவு செய்து இருந்தார்.

பீகாரில் திறந்த ஒரு மாதத்துக்குள் இடிந்து விழுந்த பாலம்.. முதல்வர் நிதிஷ் குமாரை வறுத்தெடுக்கும் எதிர்க்கட்சிகள்

முன்பு முறை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலைய ஸ்டோர்களில் வைக்கப்பட்டு இருந்த மதுபானங்கள் காணாமல் போனது. அதற்கு அம்மாநில போலீசார் எலிகள் மீது குற்றம் சாட்டினர். 2017ம் ஆண்டில் பீகாரில் வெள்ளம் ஏற்பட்டது. அதற்கு அமைச்சர் ஒருவர், எலிகள் கட்டைகளை துளைத்து கட்டமைப்புகளை பலவீனப்படுத்தியதாகவும், அவை வழியாக நதி நீர் மீறலை அனுமதித்ததாகவும் அதனால்தான் வெள்ளம் ஏற்பட்டதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது. அதனை மனதில் வைத்துதான் தற்போது பாலம் இடிந்த விழுந்த சம்பவத்தில் நிதிஷ் குமார் அரசை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.