பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் எப்போது தெரியவரும்? தேர்தல் ஆணையம் விளக்கம்

 

பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் எப்போது தெரியவரும்? தேர்தல் ஆணையம் விளக்கம்

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணியும் நேரடியாக களம் கண்டது. ஆளும் அரசுடன் பாஜக கூட்டணி அமைத்திருந்த நிலையில், எதிர்கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருந்தது. இந்த தேர்தலுக்கான 3ம் கட்ட வாக்குப்பதிவுகள் கடந்த 7ம் தேதி முடிவடைந்தது. இதை தொடர்ந்து, இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே இழுபறி நிலவி வருகிறது.

Image

இதனிடையே மாலை 6 மணி நிலவரப்படி, 12 தொகுதிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் பாஜக – 5, ஐக்கிய ஜனதா தளம் – 2, ராஷ்டிரிய ஜனதா தளம் – 2 காங்கிரஸ் – 1, விகாஷீல் இன்சான் – 2 தொகுதியில் வெற்றி பெற்றிருந்தன. இந்நிலையில் பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே முழுமையான தெரிய வரும் என துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்கா தெரிவித்துள்ளார். அங்கீகரிக்கப்பட்ட முடிவுகள் மட்டுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது என்றும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.