‘அனல் பறக்கும் பீகார் தேர்தல் களம்’ பிரச்சாரம் இன்றுடன் நிறைவு!

 

‘அனல் பறக்கும் பீகார் தேர்தல் களம்’ பிரச்சாரம் இன்றுடன் நிறைவு!

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைகிறது.

கொரோனா அச்சுறுத்தல்களுக்கிடையே பீகார் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் வரும் 28ம் தேதி தொடங்குகிறது. 28ம் தேதி முதல் நவம்பர் 7ம் தேதி வரை 3 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணியும், காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள் மகா கூட்டணியும் களம் காணுகின்றன.

‘அனல் பறக்கும் பீகார் தேர்தல் களம்’ பிரச்சாரம் இன்றுடன் நிறைவு!

நாளை மறுநாள் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில், ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் தான் வெற்றி பெறும் என்றும் தற்போதைய முதல்வர் நிதிஷ்குமார் செல்வாக்கு குறைந்திருந்தாலும் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதால் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தேர்தல் தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைகிறது. அக்.28 முதல் 7வரை 3 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலின் முடிவுகள் நவ.10ஆம் தேதி அறிவிக்கப்படவிருக்கிறது.