பீகாரில் தொழில்துறை அமைச்சரை பதவி மற்றும் கட்சியிலிருந்து நீக்கிய முதல்வர் நிதிஷ் குமார்….

பீகாரில் தொழில்துறை அமைச்சரை பதவி மற்றும் கட்சியிலிருந்து நீக்கிய முதல்வர் நிதிஷ் குமார்….

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் நிதிஷ் குமார் அரசில் அமைச்சராக இருந்தவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஷ்யாம் ராஜக். கடந்த சில தினங்களாக ஷ்யாம் ராஜக், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு தாவ போவதாக தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தது. இந்த சூழ்நிலையில் முதல்வர் நிதிஷ் குமார் அமைச்சர் பதவியிலிருந்து ஷ்யாம் ராஜக்கை நேற்று அதிரடியாக நீக்கினார்.

பீகாரில் தொழில்துறை அமைச்சரை பதவி மற்றும் கட்சியிலிருந்து நீக்கிய முதல்வர் நிதிஷ் குமார்….

முன்னதாக ஷ்யாம் ராஜக்கை கட்சியிலிருந்தும் நிதிஷ் குமார் வெளியேற்றினார். ஐக்கிய ஜனதா தள கட்சியில் பொது செயலாளராக இருந்த ஷ்யாம் ராஜக் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி 6 ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பீகார் தலைவர் வசிஷ்ட நாராயண் சிங், ஷ்யாம் ராஜக்கை கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியதாக ஆளும் கட்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகாரில் தொழில்துறை அமைச்சரை பதவி மற்றும் கட்சியிலிருந்து நீக்கிய முதல்வர் நிதிஷ் குமார்….

கட்சி மற்றும் அமைச்சர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள ஷ்யாம் ராஜக், 2009ம் ஆண்டில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். பீகாரில் ரப்ரி தேவி முதல்வராக இருந்தபோது அவரது ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் ஷ்யாம் ராஜக். பீகாரின் முன்னாள் முதல்வரும், ஊழல் வழக்கில் தற்போது சிறையில் இருப்பவருமான லாலு பிரசாத்துக்கு மிகவும் நெருங்கிய கூட்டாளி ஷ்யாம் ராஜக். இன்று அவர் ராஷ்ட்ரிய ஜனதா கட்சியில் சேர போவதாக செய்தி வெளியாகியுள்ளது.