பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டமாக நடைபெறும்!

 

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டமாக நடைபெறும்!

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3,7ஆம் தேதிகளில் 3 கட்டமாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து நவம்பர் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டமாக நடைபெறும்!

இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களிடம் பேசும் போது, கொரோனா காரணமாக 70 நாடுகள் தேர்தலை தள்ளிவைத்துள்ளன பீகார் தேர்தலை நடத்த அதிக மனிதவளம், கட்டமைப்பு தேவைப்படுகிறது . பீகார் சட்டமன்றத் தேர்தலில் காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணி வரை வாக்குபதிவு நடைபெறும். வாக்குப் பதிவிற்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அளிக்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவின் கடைசி ஒரு மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களது வாக்குகளை செலுத்தலாம். மாவோயிஸ்ட் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிப்பு இல்லை.

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டமாக நடைபெறும்!

அரசியல் கட்சியினர் வீடு, வீடாக வாக்கு சேகரிக்க செல்லும்போது 5 நபர்கள் மட்டுமே செல்ல வேண்டும். 80 வயதிற்கும் அதிகமான வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 16 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க தகுதியானவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார். அத்துடன் பீகார் தேர்தலில் வாக்களிக்க உள்ள 7 கோடி வாக்காளர்களுக்கும் கையுறை வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.