நவம்பர் 23ம் தேதி கூடுகிறது பீகார் சட்டப்பேரவை!

 

நவம்பர் 23ம் தேதி கூடுகிறது பீகார் சட்டப்பேரவை!

பீகார் மாநில சட்டப்பேரவை வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல்களுக்கிடையே நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தல் ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. மாநில கட்சிகளை விட பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமாரையே மீண்டும் முதல்வராக்க பாஜக முடிவெடுத்தது. ஆனால், துணை முதல்வர் பதவிக்கு பாஜகவை சேர்ந்த 2 பேர் தான் இருக்க வேண்டும் என நிர்பந்தித்தது.

நவம்பர் 23ம் தேதி கூடுகிறது பீகார் சட்டப்பேரவை!

அதன் படி, நேற்று பீகாரின் முதல்வராக நிதிஷ்குமாரும் துணை முதல்வராக பாஜகவை சேர்ந்த இருவரும் பதவியேற்றுக் கொண்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 14 அமைச்சர்களுள் 7 பேர் பாஜகவை சேர்ந்தவர்களே. அதனால், நிதிஷ்குமார் முதல்வராக இருந்தாலும் பீகாரில் பாஜக தான் ஆளும் என்ற கருத்து பரவலாக எழுந்திருக்கிறது. இந்த நிலையில், பீகாரின் சட்டப்பேரவை வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.