“டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நம்பர் 7” – வெற்றி பெற்றது யார்?

 

“டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நம்பர் 7” – வெற்றி பெற்றது  யார்?

இன்றைய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

“டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நம்பர் 7” – வெற்றி பெற்றது  யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ளது. இதனால் தற்போது டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. முதல் 2 போட்டிகளில் பாலா முதலிடம் பிடித்தார். இரண்டாவது டாஸ்க்கில் ரம்யா முதலிடம் பிடித்தார். நேற்று முன்தினம் கொடுக்கப்பட்ட 3வது டாஸ்க்கில் பாலா முதலிடமும், 4வது டாஸ்க்கில் ஷிவானி முதலிடமும் பிடித்தார். அந்த வகையில் நேற்றைய டாஸ்கில் சுமார் அரைமணிநேரம் வளையத்திற்குள் பந்தை வைத்து சுற்றி வெற்றி பெற்றார் ரியோ.

இந்நிலையில் தற்போது வெளியாகிய முதல் ப்ரோமோவில், டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நம்பர் 7 கொடுக்கப்படுகிறது. இதில் ஹவுஸ்மேட்ஸ் தரையில் படுத்தபடி உருண்டு சென்று வளையத்தில் இருக்கும் பந்துகளை பக்கவாட்டில் உள்ள மற்றொரு வளையத்தில் வைக்க வேண்டும். மீண்டும் அதை எடுத்து மற்றொரு வளையத்தில் வைக்க வேண்டும். இதில் இறுதிவரை பாலா – கேபி விளையாட அவர்களுக்குள் டை பிரேக்கர் ரவுண்டு வைக்கப்படுகிறது. இதில் யார் வெற்றி பெற்றது என்பதை முடிவு செய்யும் திக் திக் நிமிடத்தில் இருப்பது போல ப்ரோமோ வீடியோ முடிகிறது. இதில் பாலா வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.