பிக்பாஸின் இறுதி வாரம்… ஆறு பேருக்குள் அதிரடி போட்டி! – பிக் பாஸ் 98-ம் நாள்

 

பிக்பாஸின் இறுதி வாரம்… ஆறு பேருக்குள் அதிரடி போட்டி! – பிக் பாஸ் 98-ம் நாள்

பிக்பாஸ் இறுதி வாரத்தைத் தொட்டு விட்டது. அர்ச்சனா, நிஷா, அனிதா சம்பத், ரியோ, சுசித்ரா, ரேகா எனப் பலருக்கு அறிமுகமான முகங்கள் இருந்ததால் இந்த சீசன் நிச்சயம் களை கட்டும் என்றே நம்பப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதே உண்மை. அதெல்லாம் பேசிப் பேசி அலுத்தே விட்டது. இப்போது இறுதி வாரம். வழக்கமாக நான்கு பேர்தான் இருப்பார்கள். இந்த சீசனில் ஆறு பேர் இருக்கிறார்கள். தீபாவளி முன்னிட்டு சில வாரங்கள் எவிக்‌ஷன் இல்லாததே இதற்கு காரணம். சரி நேற்றைய எப்பிசோட் பற்றி பார்ப்போம்.

பிக்பாஸ் 98- ம் நாள்

பிக்பாஸின் இறுதி வாரம்… ஆறு பேருக்குள் அதிரடி போட்டி! – பிக் பாஸ் 98-ம் நாள்

கமல் உற்சாகமாக வந்தார். காலர் ஆஃப் வீக் வந்த நேயர் ஆரியிடம் பேசினார். ‘மத்தவங்க குறையைச் சொல்லி திருத்த நினைக்கிறீங்க… அப்ப உங்க குறைகளை?” என்ற சரியான கேள்வியை சுற்றி வளைத்து நமத்துப்போகச் செய்தார் திருச்சி நேயர். வழக்கமாக ஆரி சொல்வதைச் சொல்லி ஒதுங்கிக்கொண்டார்.

நேயர் அப்படியே காலைக் கட் பண்ணாமல் விருமாண்டி படம் பற்றி கமலின் நினைவுகளைக் கிளறிவிட்டுச் சென்றார். விருமாண்டி உருவாக்கம் பற்றி நீண்ட பேச்சு பேசினார். சமீபத்தில் ’விருமாண்டி கதை என்னுடையது. கமலிடம் அதைச் சொன்னேன். அப்படியே அவர் கதையாக மாற்றி எடுத்துவிட்டார்’ என்பதாக கங்கை அமரன் பேட்டியில் சொன்னது நினைவுக்கு வந்தது.

’இப்போது நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள்… என்ன சொல்வீர்கள்?’ என்று கேட்டு ஒவ்வொருவரையும் பேச வைத்தார். ஆரி மட்டும் வித்தியாசமாகச் சொல்ல ட்ரை பண்ணினார். மற்றவர்கள் எல்லாம் வெல்வோம் என்ற நம்பிக்கை இல்லாததுபோலவே ஒப்புக்கு பேசினார்கள்.

பிக்பாஸின் இறுதி வாரம்… ஆறு பேருக்குள் அதிரடி போட்டி! – பிக் பாஸ் 98-ம் நாள்

ஆரியிடம் விவசாயம் பற்றி தெரிந்துகொண்டதாகவும் நிகழ்ச்சியிலிருந்து வெளியே சென்றதும் நிலம் வாங்கி விவசாயம் செய்யப்போவதாகவும் சொன்னார் பாலா. ஆனால், இந்த பார்ட் டைம் விவசாயிகளால் விவசாயத்தை ரொமாண்டிசம் செய்ய முடியுமே தவிர. விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. ஏனெனில், இவர்கள் விவசாய கூலி பிரச்சனை பற்றி பேச மாட்டார்கள். விவசாயிகள் வேளான் சட்டம் எதிராகப் போராடுகிறார்கள். அது பற்றி பேச மாட்டார்கள். நம்மாழ்வார் பற்றி பேசினாலும், அவர் காப்பரேட்டுகளை எதிர்த்தது பற்றி வாயைத் திறக்க மாட்டார்கள். இதேபோல விஐபிகளில் பார்ட் டைம் விவாயம் என்பது மற்றொரு பொழுதுபோக்கு அன்றி வேறில்லை.

அடுத்து, பாலாவை காப்பாற்றி இறுதிப் போட்டிக்கு அனுப்பினார் கமல். அதுக்கு ஓர் அழுகையைப் போட்டார் பாலா. இறுதிப்போட்டிக்குச் செல்ல மாட்டோம் என்ற எண்ணத்தில் இருந்திருப்பார் போல. ஏனெனில், ஃபினாலே டிக்கெட்டுக்கான போட்டிகளில் வெறி கொண்டு விளையாட நினைத்தார். அந்த நினைப்பே அவரை தோற்க வைத்தது.

பிக்பாஸின் இறுதி வாரம்… ஆறு பேருக்குள் அதிரடி போட்டி! – பிக் பாஸ் 98-ம் நாள்

இறுதிப்போட்டிக்கு தகுதியான ஆரி, சோம், பாலா ஆகியோரை ஓரமாக உட்காரச் சொன்னார். அப்போது எழுந்து வேறு பக்கம் செல்ல முயன்ற ரியோவை தடுத்து நீங்களும் ஃபைனல் லிஸ்ட்டில் உட்காருங்க என்று கமல் சொன்னதும் அவரும் ஹேப்பி. வீட்டில் டிவியில் பார்த்துக்கொண்டிருக்கும் அர்ச்சனா அண்ட் கோவும் ஹேப்பியாகி இருக்கும்.

அடுத்து ரம்யா சேவ் ஆனார். தான் நிச்சயம் இறுதிப் போட்டியில் இருப்போம் என்று அவர் கணித்து விட்டார். அதனால்தான் மற்றவர்கள் சேவ் ஆகும்போது எந்தப் பதற்றமும் இல்லாதிருந்தார். ஆனால், அவரையும் சேர்த்து மூவர் மட்டுமே என்ற நிலையில் முகத்தில் ஒரு கவலை தெரிந்தது. அவர் காப்பாற்றப்பட்டது ஹேப்பியானர்.

பிக்பாஸின் இறுதி வாரம்… ஆறு பேருக்குள் அதிரடி போட்டி! – பிக் பாஸ் 98-ம் நாள்

இறுதியில் மிஞ்சி இருந்தது கேபி மற்றும் ஷிவானி. இருவரும் இவ்வளவு நாட்கள் இருந்ததே அதிகம்தான். எல்லோரும் எதிர்பார்த்ததுபோல ஷிவானி எவிக்ட் ஆனார். பெரிய் அழுகை இல்லை. வெளியே கமலிடம் பேசியபோது, ‘இந்த வாரம் போவேன் என்று எதிர்பார்க்க வில்லை. அதற்கான மனநிலையில் இல்லை’ என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

வீட்டுக்குள் ஷிவானி வெளியேறிய துக்கம் ரம்யாவுக்கும் ஷிவானிக்கும் மட்டுமே இருந்ததுபோல பேசிக்கொண்டார்கள். ரியோ ஃபைனலுக்கு போகமாட்டான் என சிலர் பேசினார்கள்… அவர்களுக்காகவே வந்துட்டேன் என்பதாக சோம்க்கூட சேர்ந்து அலப்பறை பண்ணிட்டு இருந்தார் ரியோ.

பிக்பாஸின் இறுதி வாரம்… ஆறு பேருக்குள் அதிரடி போட்டி! – பிக் பாஸ் 98-ம் நாள்

இந்த வாரம் இறுதி வாரம். ஆரி ஆர்மி வேலைக்கு லீவ்வெல்லாம் போட்டு ஓட்டு வேட்டையில் இறங்கி விடும். இன்னும் ஆறு நாட்களில் யார் பிக்பாஸ் சீசன் 4-ல் வெற்றியாளர் என்பது தெரிந்துவிடும்.