Home சினிமா ஆரி வெற்றியும் கமலின் செல்ல முத்தமும் சில கண்ணீர் துளிகளும்… பிக்பாஸ் இறுதிநாள் தருணங்கள்!

ஆரி வெற்றியும் கமலின் செல்ல முத்தமும் சில கண்ணீர் துளிகளும்… பிக்பாஸ் இறுதிநாள் தருணங்கள்!

105 நாட்காக நடந்த நீண்ட கேம் ஷோவான பிக்பாஸ் சீசன் 4 நேற்று இரவோடு முடிவடைந்தது. பலரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் விதமாக ஆரி இந்த சீசனின் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று 6 மணி நேரத்திற்கும் அதிகமாக ஒளிப்பரப்பான ஃபினாலே விருந்து சில தருணங்கள்.

கதர் கைத்தறியில் நெய்த கோட் சூட்டோடு அட்டகாசமாக எண்ட்ரி கொடுத்தார் பிக்பாஸ். அதற்கு எவிக்‌ஷன் ஆன போட்டியாளர்களை அரைவட்டமாக நிற்க வைத்து அரைநிமிட வர்ணனை நன்றாக இருந்தது. ஸ்கிரிப்ட் ரைட்டருக்கு வாழ்த்துகள் தலைவா!

முன்னாள் போட்டியாளர்கள் ஆடியன்ஸாக அமர்ந்திருந்தனர். ஒவ்வொருவரும் பிக்பாஸ்க்கு பிறகு என்ன மாற்றம் எனச் சொன்னார்கள். மால்க்குச் சென்றபோது மாஸ்க் அணிந்திருந்தாலும் ரசிகர்கள் கண்டுபிடித்து செல்ஃபி எடுத்துக்கொண்டதை பெருமையாகச் சொன்னார் சம்யுக்தா.

தனது எப்பிசோட்டுகளை அப்பா மகிழ்ச்சியும் பெருமையும் கலந்து ரசித்ததாக அனிதா பகிர்ந்துகொண்டார். அவரின் அப்பா மறைவுக்கு கமல் ஆறுதல் தெரிவித்தார்.

வேல்முருகன் அரசு துறை சார்ந்த கமிட்டியில் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதைத் தெரிவித்தார். ஷிவானி, கேபி, ரேகா, சுரேஷ் உள்ளிட்டோர் சுருக்கமாகச் சொல்லி முடித்தனர்.

அர்ச்சனா, சுசித்ரா, சம்யுக்தா, ஆஜித், வேல்முருகன் உள்ளிட்டோரின் பாடல், ஆடல் கச்சேரியும் இடையிடையே இடம்பிடித்தன. ஏற்கெனவே சூட் செய்யப்பட்டு நமக்கு இடையிடையே ஒளிப்பரப்பினார்கள்.

உள்ளே இறுதி போட்டியில் இருந்த ரம்யா, சோம், ஆரி, ரியோ, பாலா என்னவாக போகிறதோ என்ற படபடப்பில் எல்லாம் இல்லை. ஆரிதான் வெல்வார் என்று அவர்கள் யூகித்திருந்தார்கள்.

பிக்பாஸ் சீசன் 3 வெற்றியாளர் முகேன் வீட்டுக்குள் சென்றார். ஐவருக்கும் தலா ஒரு ஆக்ஸஸ் கார்டு கொடுத்து கேட்டில் ஸ்விப் செய்ய சொன்னார். யார் கார்டு ஓப்பன் ஆகிறதோ அவர் தன்னுடன் வருவார் என்றார். ஆனால், ஐந்து பேரின் கார்டுகளும் ஓப்பன் ஆக வில்லை. அது சும்மா விளையாட்டாம்.

அடுத்து ஐந்து பேரையும் வீட்டின் வெவ்வேறு இடங்களில் உட்கார வைத்து கறுப்புத் துணியால் முகத்தை மூட வைத்தார். ஆனால், அதுவும் ஒரு விளையாட்டுதானாம். இறுதியாக கார்டை ஸ்விப் செய்யும் இன்னொரு கேம் கொடுத்து அதில் எவிக்ட்டான சோம் சேகரை வெளியே அழைத்துச் சென்றார்.

அடுத்து வந்தவர் கவின். அவர் வீட்டுக்குள் சென்று செம கலாட்டா செய்தார். பாட்டுப் பாடி, டான்ஸ் ஆடி செம எண்டர்டெயின்மெண்ட் செய்தார். அந்த உற்சாகத்தில் வந்த வேலையை மறந்திடாதீங்க என பிக்கி நினைவூட்டினார். அதன்படி நியூஸ்பேப்பர் செய்திகளை அடுக்கி வைத்து, அதில் ஒரு க்ளூ வைத்து ரம்யாவை எவிக்ட் என அறிவித்து வெளியே அழைத்து வந்தார்.

அடுத்து ஷெரின் வந்தார். அவர் வீட்டுக்குள் சென்று பிக்கியையே கலாய்த்துக்கொண்டிருந்தார். கன்ஃபெக்‌ஷன் ரூம்க்கு கூப்பிடுங்க…கூப்பிடுங்க எனச் சொல்லிக்கொண்டே இருந்தார். இறுதியில் எல்லோருக்கும் பெட்டியைக் கொடுத்து சாவியால் திறக்க வைத்து ரியோவை எவிக்ட் செய்து அழைத்துச் சென்றார்.

ரியோவுக்கு தான் டைட்டில் வின்னர் இல்லை என்பது அவர் யூகித்ததுதான். ஆனால், இரண்டாம் இடம் கிடைக்கும் என நினைத்தார். அது நடக்க வில்லை என்பதில் சின்ன வருத்தம் இருக்கலாம். ‘ஷெரின் கூப்பிட்டுட்டு போறாங்கன்னு சொன்னதும் எவ்வளவு சிரிப்பு’ என்று கலாய்த்தார்.

ஆரி – பாலா இருவரும் மட்டும் இருந்த நிலையில் பிக்கி நெகிழ்ச்சியான குரலில் தனது கடைசி உரையை முடித்தார். நிஜமாகவே அது உணர்ச்சி பூர்வமாக இருந்தது.

இடையில் கமல்ஹாசன் ‘வாசிப்பது எப்படி’ எனும் செல்வேந்திரன் எழுதிய புத்தகத்தை அறிமுகப் படுத்தினார். மேலும், அனிதாவின் வேண்டுகோளுக்கு இணங்க தன் கவிதை ஒன்றை நிகழ்த்திக் காட்டினார். அது எத்தனை பேருக்குப் புரிந்திருக்கும் என்பது சந்தேகம்தான் கமல் பாடினா நல்லாதான் இருக்கும் என கைத்தட்டி வைத்தார்கள்.

கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து, ஆரி – பாலா இருவரிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு மேடைக்கு அழைத்து வந்தார். அதற்கு முன் அவர்களுக்கு என கமலின் பரிசாக கைத்தறி ஆடைகளைக் கொடுத்தார். ஆரியின் ஆடை நிஜமாகவே சிறப்பாக இருந்தது.

மேடையில் சின்னச் சின்னதாக சஸ்பென்ஸ் செய்துவிட்டு ‘டைட்டில் வின்னர்’ என ஆரியின் கையைத் தூக்கினார் கமல்ஹாசன். பலரும் எதிர்பார்த்தது என்பதால் பெரிய வியப்பு யாரிடமும் இல்லை. ஒருவேளை ரியோவும் ஆரியும் இருந்திருந்தால் அர்ச்சனா அண்ட் கோ அழுது ஆர்ப்பாட்டம் செய்த காட்சியாவது மிஞ்சிருக்கும். சென்ற சீசனில் சாண்டி – முகேன் என இருந்தபோது இருந்த பரபரப்பு மிஸ்ஸிங்.

ஆரியின் குடும்பம் செம ஹேப்பி. ஆரியின் மகள் தத்தி தத்தி வந்தாள். அவளை கமல் வாரி ஏந்தி தூக்கிக்கொண்டாள். மகள் கையாலேயே 50 லட்சம் பரிசு பெட்டியைப் பெற்றார் ஆரி. இடையே ஆரியின் மகள் கமலுக்கு அன்பு முத்தம் தர உணர்வுபெருக்கானது மேடை.

எல்லோரும் மேடையின் மய்யப் பகுதிக்கு வந்து ஆரியைக் கொண்டாட பிக்பாஸ் சீசன் 4-க்கு இறுதி வணக்கம் சொல்லி முடித்து வைத்தார் கமல்ஹாசன். அவருக்கான சிறப்பு குறும்பட வீடியோ போடப்பட்டதால் இதுவே அவர் தொகுத்து வழங்கும் கடைசி சீசன் என்பது போல இருந்தது.

தினந்தோறும் மக்களுக்கு நல்லதொரு பொழுதுபோக்காக இருந்த பிக்பாஸ் சீசன் 4 நேற்றோடு முடிவடைந்தது. நமது TopTamilNews தளத்திலும் பிக்பாஸ் சீசன் 4 தொடங்கியதிலிருந்து தினமும் அதன் அப்டேட் ஆர்ட்டிகிள், செய்திகள் வெளியிட்டு வந்தோம். அதற்கு உங்களின் ஆதரவுக்கு எங்களின் நன்றி.  அந்த ஆர்ட்டிகிள்களை இந்த லிங்க்கில் சென்று படிக்கலாம்.

பிக்பாஸ் சீசன் 4

மாவட்ட செய்திகள்

Most Popular

ஒதுங்கிய சசிகலாவால் ஓங்கிய எடப்பாடியின் செல்வாக்கு!

ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதுபோல் பதவி கொடுத்த சசிகலாவையே ஓரங்கட்டிவிட்டார் திறமைசாலி எடப்பாடி பழனிசாமி. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கான செல்வாக்கு மேலும் அதிகரித்துள்ளது. கட்சிக்குள் இருந்த கொஞ்ச...

தலைமுடி நீண்டு கருகருவென வளர… இந்த 5 உணவை டிரை செய்து பாருங்க!

வயது அதிகரிக்க அதிகரிக்க முடி உதிர்வதைத் தடுக்க முடியாமல் பலரும் வேதனை அடைகின்றனர். முடி வளர்ச்சி, உதிர்தல், அதன் ஆரோக்கியம் என அனைத்தும் வயது, பாலினம், ஆரோக்கியம் மற்றும் நாம்...

கும்பகோணம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு!

தஞ்சாவூர் கும்பகோணம் அரசு கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை இன்று தஞ்சை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சை...

ஏன் இருக்கிறது என்று தெரியாத குடல்வால் ஏற்படுத்தும் பாதிப்பு… அறிகுறிகள் அறிவோம்!

மனித உடலில் எதற்காக இருக்கிறது என்றே தெரியாமல் இருக்கும் ஒரு உறுப்பு குடல்வால். அதனால் பயன் இருக்கிறதா என்று தெரியவில்லை. சிலருக்கு அது தொல்லையாக மாறுவது மட்டும் தொடர்கிறது. சிறுகுடல்...
TopTamilNews