பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது யார்?

 

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது யார்?

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 21 ஆவது நாளான இன்று கமல் ஹாசனின் விஜயம் கிடைக்கும். நேற்றைய நிகழ்ச்சியில் ஷனம் – சுரேஷ் மோதல் குறித்து கமல் ஆலோசிக்க ஷனமும் சுரேஷும் மாறிமாறி மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். அதே சமயம் வீட்டுக்குள் வந்தும் அர்ச்சனா தொகுப்பாளர் வேலையை செய்வதாக கமல் கொளுத்தி போட ஆடிப்போனார் அர்ச்சனா. அத்துடன் எவிக்ஷனிலிருந்து காப்பாற்றப்பட்டார் பாலா. இப்படியாக நேற்றைய நிகழ்ச்சி நடந்து முடிந்தது.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில், ஆஜித்-சுரேஷ்-அனிதா மூவரிடமும் பேசும் கமல் யார் வெளியேறுவார்கள் என்று கேட்கிறார். அதற்கு ஆஜித் தான் வெளியேற்றப்பட வாய்புள்ளதாக சொல்ல, கமல் இவருக்கு முன்னாடியே விஷயங்கள் தெரிகிறதா?இல்லையா என்பதை இப்போ முடிவு பண்ணிடலாம் என்று சொல்வது போல ப்ரோமோ வீடியோ முடிகிறது.

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது யார்?

இதில் ஆஜித் வெளியேற்றப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் அவர் எவிக்ஷன் ப்ரீ பாஸை பயன்படுத்தி மீண்டும் வீட்டுக்குள் செல்வார். இதனால் இந்த வாரம் எவிக்ஷன் இல்லை என்று கூறப்படுகிறது.