Home தமிழகம் 'கேபிக்கு ஆதரவு அளித்த சுரேஷ்' கட்டி அணைத்து கண்கலங்கிய தருணம்!

‘கேபிக்கு ஆதரவு அளித்த சுரேஷ்’ கட்டி அணைத்து கண்கலங்கிய தருணம்!

பிக் பாஸ் சீசன் 4ன் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் ஹவுஸில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என நேற்றைய நிகழ்ச்சி கலகலப்பாக இருந்த நிலையில், அர்ச்சனா எண்ட்ரி கொடுத்த வுடன் டாஸ்க் ஒன்றை கொடுத்து எல்லாரையும் கடுப்பாகி விட்டார் பிக் பாஸ். அதாவது, ஹவுஸ் மேட்ஸின் பெயரை டேமேஜ் செய்யும் விதமாக அவர்களுக்கு விருதுகள் கொடுக்கப்பட்டது.

நமுத்து போன பட்டாசு என சனத்துக்கும், பிக் பாஸ் ட்ரெண்டிங் என சுரேஷ் மற்றும் அனிதாவுக்கும், ஷோகேஸ் பொம்மைகள் என சோமுக்கும் சம்யுக்தாவுக்கும் வழங்கப்பட்டன. சும்மா இருக்கும் ஹவுஸ் மேட்ஸை தூண்டி விடுவதற்கு தான் இந்த விருதுகள் வழங்கப்படுவதாக விஜே அர்ச்சனா கமெண்ட் அடித்தார். இந்த நிலையில், டாஸ்க் ஒன்றில் கேபிக்கு யாரும் சப்போர்ட் செய்யாதது போல இன்றைய நிகழ்ச்சிக்கான 2ஆவது புரோமோ வெளியாகியுள்ளது.

அதில், கேபிக்கு யாரு ஆதரவு கொடுக்கிறீங்க என பிக் பாஸ் கேட்க சுரேஷ் சக்கரவர்த்தியை தவிர வேறு யாரும் எழுந்து நிற்கவில்லை. ஆனால் வேல்முருகனுக்கோ சனம், ரேகா, ஆரி, சம்யுக்தா, அர்ச்சனா என எல்லாரும் ஆதரவு தருகின்றனர். பின்னர், கேபியை சுமந்து கொண்டு சுரேஷ் நெடு நேரம் நிற்பது போல காட்டப்பட்டிருக்கிறது. முடில்லன்னா வேணாம் தாத்தா என கேபி சொல்வதை கூட கேட்காமல், சுரேஷ் கேபியை தூக்கிக் கொண்டு நிற்கிறார். ஒரு கட்டத்தில் கீழே இறங்கி டாஸ்க்கில் இருந்து விலகிய கேபி, சுரேஷை கட்டி அணைப்பது போல புரோமோ முடிகிறது.

இதுவரை ஹவுஸ்மேட்ஸ் இடம் வெறுப்பை மட்டுமே சம்பாதித்த சுரேஷ் சக்கரவர்த்தி, தனது இரக்கமான மற்றொரு முகத்தையும் இந்த டாஸ்க்கின் மூலம் காட்டியிருக்கிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மேலும், தாத்தா வேற லெவல் பன்றாரு கண்டிப்பா ஃபைனல்ஸ்க்கு போகணும் என கமெண்ட் செய்து வருகிறார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

7.5% உள்ஒதுக்கீடுக்கு விரைந்து ஒப்புதல் தர ஆளுநர் சம்மதம்!

மருத்துவ படிப்புக்கு 7.5% உள்ஒதுக்கீடு தர ஆளுநர் ஒப்புதல் அளித்து விட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் விதமாக,...

கோவை- சாலையோரத்தில் உறங்கியர் தலையில் கல்லைப்போட்டு கொலை

கோவை கோவையில் சாலையோரத்தில் படுத்து உறங்கியவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நவராத்திரி ஐந்தாம் நாள்: சகல ஐஸ்வரியத்தையும், புத்திரபாக்கியத்தையும் தருவாள் தேவி ஸ்கந்த மாதா!

அம்பிகையின் அருட்கொடையாய் விளங்கும் நவராத்திரி உற்சவ நாட்களில் பராசக்தியே துர்க்கையாகி தீமைகளை அழிக்கிறாள். மகாலட்சுமியாகி செல்வங்களை வாரி வழங்குகிறாள். சரஸ்வதியாகி நல்ல புத்தியையும், பக்தியையும் அளிக்கின்றாள். புத்தி, பக்தி, சித்தி...

தர்மபுரி: ’’ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை மேம்படுத்த ஜப்பான் தூதரகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது’’-எம்.பி. செந்தில்குமார் பேட்டி

உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத்தலமான ஒகேனக்கல் பகுதியை மேம்படுத்தாமல் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக இருக்கிறது. நிச்சயமா ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ஒகேனக்கல் சர்வதேச சுற்றுலா தளமாக மாற்றம் செய்யப்படும்.ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை...
Do NOT follow this link or you will be banned from the site!