“நாமினேட் பண்ணும் போது தலையிடாதீங்க பாலா” : அனிதா சம்பத் ஆவேசம்!

 

“நாமினேட் பண்ணும் போது  தலையிடாதீங்க பாலா” : அனிதா சம்பத் ஆவேசம்!

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

“நாமினேட் பண்ணும் போது  தலையிடாதீங்க பாலா” : அனிதா சம்பத் ஆவேசம்!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 81 நாட்கள் ஆகிறது. இதுவரை அளித்த டாஸ்க்குகளில் மணிக்கூண்டு டாஸ்க் மட்டுமே சுவாரஸ்யமானதாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பால் – கேட்ச் டாஸ்க் அளிக்கப்பட்டு வந்தது. இதில் ரியோ அணி சிறப்பாக விளையாடியது. இதற்கான வரிசைப்படுத்தலில் ரியோ, ரம்யா, சோம் மூவரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

“நாமினேட் பண்ணும் போது  தலையிடாதீங்க பாலா” : அனிதா சம்பத் ஆவேசம்!

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், சுவாரஸ்யம் குறைவாக ஈடுபட்டோரை தேர்வு செய்யும் போது அனிதா – பாலாவை தேர்வு செய்கிறார். அதற்கு பாலா வாக்குவாதம் செய்ய, கேபி – சோம் தூங்குனாங்கன்னு சொன்ன நீங்க, ஷிவானி பேர சொல்லல.

நான் தான் இங்க நாமினேட் பண்ணிட்டு இருக்கேன். நான் என்ன நெனைக்கிறேனோ அத தான் பேச முடியும். நாமினேட் பண்ணும் போது தலையிடாதீங்க என்று காரசார வாக்குவாதத்தில் ஈடுபடுவது போல ப்ரோமோ முடிகிறது.