இந்த வாரம் ஜோடியாக வெளியேறும் இருவர்…. பிக் பாஸ் வீட்டில் தரமான சம்பவம் இருக்கு!!!

 

இந்த வாரம் ஜோடியாக வெளியேறும் இருவர்….  பிக் பாஸ் வீட்டில் தரமான சம்பவம் இருக்கு!!!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து இன்றுடன் 69 நாட்கள் ஆகிறது. ஆனால் இதுவரை சண்டை, சச்சரவு ஓய்ந்த பாடில்லை. கமல் ஹாசன் வாரம் தோறும் வந்து டிப்ஸ் என்ற பெயரில் எச்சரித்து விட்டு போனாலும் கூட, ஹவுஸ்மேட்ஸ் திருந்துவதாக இல்லை என்பதே பிக் பாஸ் வெறியர்களின் கருத்து.

இந்த வாரம் ஜோடியாக வெளியேறும் இருவர்….  பிக் பாஸ் வீட்டில் தரமான சம்பவம் இருக்கு!!!

இதனால் குரூப் பர்பாமன்ஸுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள் பிக் பாஸ் ரசிகர்கள். இந்த வாரம் சோம், நிஷா, கேபி, ரம்யா பாண்டியன், ஜித்தன் ரமேஷ், ஷிவானி ஆகியோர் எலிமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.

இந்நிலையில் பிக் பாஸ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோவில் பேசும் கமல் ஹாசன், பலமுறை சொல்லி பார்த்துட்டேன் ஜோடியா விளையாடுனீங்கன்னா ஜோடியா வெளியே போவீங்க. கூட்டமா விளையாடுனீங்கன்னா கூண்டோடு கைலாசம் போவீங்கன்னு; கேட்கலையே . நீங்க உங்க வேலையை செய்ய ஆரம்பிச்சிடீங்க. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இந்த வாரம் 2 எவிக்ஷன். அதுல ஒன்னு இன்னைக்கே செய்வோம் என்று கூறும் படியாக ப்ரோமோ முடிகிறது.