அரச குடும்பம் vs அரக்க குடும்பம் : சுரேஷிடம் மோதும் பாலா

 

அரச குடும்பம் vs அரக்க குடும்பம் : சுரேஷிடம் மோதும்  பாலா

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அரச குடும்பம் vs அரக்க குடும்பம் : சுரேஷிடம் மோதும்  பாலா

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே சண்டை, சச்சரவாகவே உள்ளது. இந்த வாரம் நாமினேஷனுக்கு சுரேஷ், அனிதா, பாலா, ஆஜித், ஆரி உள்ளிட்டோர் தேர்வாகியுள்ளனர்.

அரச குடும்பம் vs அரக்க குடும்பம் : சுரேஷிடம் மோதும்  பாலா

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், நாடா? இல்லை காடா? சொர்க்கபுரி ராஜ குடும்பத்திற்கும், மாயபுரி அரக்க குடும்பத்திற்கும் இடையே நடக்கும் கடும்போட்டி.

அரச குடும்பம் vs அரக்க குடும்பம் : சுரேஷிடம் மோதும்  பாலா

சிலையாக அமர்ந்து உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வெல்லப்போவது யார்? என்ற வாய்ஸ் ஓவருடன் இருக்கும் ப்ரோமோவில் முகத்தில் கரியை பூசுவது, சிலையாக இருக்கும் ரியோவை சிரிக்க வைக்க முயற்சிப்பது என அரக்க குடும்பம் அட்டூழியம் செய்கிறது. அப்போது சுரேஷுக்கும் பாலாவுக்கும் இடையே மோதல் ஏற்படுவது போல ப்ரோமோ வீடியோ முடிகிறது.

சொர்க்கபுரி அரச குடும்பத்தில் ராஜாவாக வேல்முருகன், ராஜமாதாவாக நிஷா மற்றும் சனம், ரம்யா, சம்யுக்தா, பாலா, ரியோ, சோம் சேகர் உள்ளிட்டோர் உள்ளனர். அதேபோல் மாயபுரி அரக்க குடும்பத்தில் சுரேஷ், ஷிவானி, அனிதா, ஆரி, ஆஜித், அர்ச்சனா, கேபிரில்லா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.