சுரேஷை வச்சி செய்யும் அர்ச்சனா: சிரித்து கடுப்பேற்றும் ஹவுஸ்மேட்ஸ்!

 

சுரேஷை வச்சி செய்யும் அர்ச்சனா: சிரித்து கடுப்பேற்றும் ஹவுஸ்மேட்ஸ்!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

சுரேஷை வச்சி செய்யும் அர்ச்சனா: சிரித்து கடுப்பேற்றும் ஹவுஸ்மேட்ஸ்!

பிக் பாஸ் 4 சீசனில் 16 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில் டெய்லி டாஸ்க், எவிக்ஷன் பிராசஸில் இருந்து தப்பிக்கும் டாஸ்க் என பிக் பாஸ் வீடு பரபரப்பாகவுள்ளது . நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் குடும்பம் டான்ஸ், பாட்டு என ஜாலியாக இருந்தது. இதனிடையே இன்று வெளியான முதல் ப்ரோமோவில் விஜே அர்ச்சனா பிக் பாஸ் வீட்டுக்குள் வருகை புரிந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாம் ப்ரோமோவில், விஜே அர்ச்சனா யாருக்கெல்லாம் சுரேஷ் சார் சமையல் பிடிக்கல என்று கேட்கிறார். அதற்கு ரியோ, அதுமட்டும் தான் பிடிக்கும் அதனால் யாரும் கையை தூக்கல என்று நக்கல் அடிக்கிறார். இப்படி அர்ச்சனா தொடர்ந்து சுரேஷை டார்கெட் செய்யும் படியாகவே ப்ரோமோ முடிகிறது.

சுரேஷை வச்சி செய்யும் அர்ச்சனா: சிரித்து கடுப்பேற்றும் ஹவுஸ்மேட்ஸ்!

பிக் பாஸ் வீட்டுக்குள் ஏடாகூட கருத்துக்கள், கோபம், மற்றவர்களை பேச விடாமல் தடுப்பது என சுரேஷ் மீது பல குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகிறது. அப்படி இருக்கையில் அர்ச்சனாவை பிக் பாஸ் வீட்டுக்குள் அழைத்திருப்பது சுரேஷுக்கு போட்டியாக தான் என்று நெட்டிசன்ஸ் கருத்து கூறி வருகிறார்கள்.