“நாளை முதல் ரூ.45க்கு பெரிய வெங்காயம் விற்பனை” : அமைச்சர் செல்லூர் ராஜு

“நாளை முதல் ரூ.45க்கு பெரிய வெங்காயம் விற்பனை” : அமைச்சர் செல்லூர் ராஜு

சென்னையில் நாளை முதல் கிலோ ரூ.45க்கு பண்ணை பசுமைக் கடைகளில் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

“நாளை முதல் ரூ.45க்கு பெரிய வெங்காயம் விற்பனை” : அமைச்சர் செல்லூர் ராஜு

பெரிய வெங்காயம் விலை உயர்ந்து வரும் நிலையில் பசுமை கடைகளில் கிலோ ரூ. 45க்கு விற்க தமிழக அரசு நடவடிக்கையை எடுத்துள்ளது. மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடந்த கூட்டத்தில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெரிய வெங்காயம் விலை ரூ.100ஐ தாண்டியதால் விலை குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“நாளை முதல் ரூ.45க்கு பெரிய வெங்காயம் விற்பனை” : அமைச்சர் செல்லூர் ராஜு

நேற்றைய நிலவரப்படி ரூ. 80க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெங்காயத்தின் விலை இன்று ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர் மழையால் ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து வரத்து குறைந்ததால் தமிழகத்தில் வெங்காயம் விலை அதிகரித்துள்ளது. மழை காரணமாக சாகுபடி குறைந்துள்ளதாக கடந்த ஒரு வாரத்தில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

“நாளை முதல் ரூ.45க்கு பெரிய வெங்காயம் விற்பனை” : அமைச்சர் செல்லூர் ராஜு

இதனால் சாமானிய மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஏற்கனவே கொரோனா காரணமாக மக்களின் பொருளாதார நிலை வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில் காய்கறிகளின் விலை ஏற்றம் கூடுதல் சுமையாக மாறியுள்ளது.