BIG BREAKING: விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது!

 

BIG BREAKING: விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது!

நிலவுக்கு அருகே தகவல் தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்துள்ளார்.

சந்திரயான் 2 நிலவில் இறங்கி சாதனை படைக்கும் என்று 130 கோடி இந்தியர்களும் எதிர்பார்த்த நேரத்தில், எதிர்பாராத விதமாக கடைசி நேரத்தில் பின்னடைவை சந்தித்தது. சந்திரயான் 2 விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும், இஸ்ரோவின் முயற்சியை நாட்டு மக்கள் அனைவரும் பாராட்டினர். 

நிலவின் தென் பகுதியில் சந்திரயான் 2 மிஷனை இறக்க இஸ்ரோ மேற்கொண்ட முயற்சி தோல்வியடையவில்லை 95 % வெற்றிதான் என நேற்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருந்தார். 

விக்ரம்

இந்நிலையில் இன்று லேண்டர் விக்ரமை நிலவைச் சுற்றிவரும் ஆர்பிட்டர் படம் எடுத்து அனுப்பியுள்ளது. ஆனால் லேண்டர் உடனான தகவல் தொடர்பு இன்னும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருவதாக, இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார்