மஜாஜ் செய்வதாக ஓட்டலுக்கு அழைத்து விஞ்ஞானியை பிணைக்கைதியாக வைத்திருந்த பிக் பாஸ் போட்டியாளர்

மஜாஜ் செய்வதாக ஓட்டலுக்கு அழைத்து விஞ்ஞானியை பிணைக்கைதியாக வைத்திருந்த பிக் பாஸ் போட்டியாளர்

மசாஜ் செய்வதாகச் சொல்லி வரவழைத்து உத்தரபிரதேசத்தின் நொய்டா நகரில் உள்ள ஓயா ஓட்டலில் விஞ்ஞானி ஒருவரை பிணைக்கைதியாக வைத்திருந்த பெண் பிக்பாஸ் போட்டியாளரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

மஜாஜ் செய்வதாக ஓட்டலுக்கு அழைத்து விஞ்ஞானியை பிணைக்கைதியாக வைத்திருந்த பிக் பாஸ் போட்டியாளர்

நொய்டாவில் செக்டர் 74ல் வசிக்கும் 35 வயதான விஞ்ஞானி ஒருவர், மசாஜ் செய்வதற்காக விளம்பரங்களை பார்த்து போன் செய்துள்ளார் அப்போது சுனிதா குர்ஜார் என்ற பெண் தொடர்பில் வந்தபோது, எந்த இடம் விஞ்ஞானி கேட்டபோது, செக்டர் 41ல் உள்ள ஓயோ ஓட்டலுக்கு வரச்சொல்லி இருக்கிறார்.

மஜாஜ் செய்வதாக ஓட்டலுக்கு அழைத்து விஞ்ஞானியை பிணைக்கைதியாக வைத்திருந்த பிக் பாஸ் போட்டியாளர்

ஓயோ ஓட்டலுக்கு போன விஞ்ஞானியை ஒரு அறையில் வைத்து அடைத்துள்ளான் குணால் என்பவன். பின்னர் விஞ்ஞானியின் மனைவிக்கு போன் செய்த சுனிதா, 10 லட்சத்தை உடனே கொண்டுவரச்சொல்லி மிரட்டியிருக்கிறார்.

மஜாஜ் செய்வதாக ஓட்டலுக்கு அழைத்து விஞ்ஞானியை பிணைக்கைதியாக வைத்திருந்த பிக் பாஸ் போட்டியாளர்

கணவன் உயிருக்கு ஆபத்து என்று விஞ்ஞானியின் மனைவி போலீசில் புகார் கொடுக்கவும், அவர்கள் வகுத்துக்கொடுத்த திட்டத்தின்படி, பணத்தை எடுத்துக்கொண்டு ஓட்டலுக்கு சென்றார். அப்போது ஓட்டலுக்கு வெளியே நின்றிருந்த மூன்று பேர் விஞ்ஞானி மனைவியிடம் நெருங்கி பணத்தை வாங்கக்கப்போகும் நேரத்தில் போலீஸ் சுற்றி வளைத்தது. இதில் இரண்டு பேர் எஸ்கேப் ஆகிவிட்டார்கள்.
அறையில் இருந்த சுனிதாவிடம் விசாரித்தபோது, தான் இந்தி பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றுள்ளதாக சொல்லி, சல்மான்கானுடன் இருக்கும் புகைப்படத்தை காட்டியிருக்கிறார். மேலும், பிக் பாஸ் சீசன் 10 வெற்றியாளர் மன்வீர் குர்ஜரின் உறவினர் என்றும் சொல்லியிருக்கிறார்.

கைது செய்யப்பட்டவர்களின் நடத்திய விசாரணையின் பேரில் தப்பியோடியவர்களையும் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றார்கள்.