பிக்பாஸ் ஆரி – ரியோ ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் செம சண்டை #பிக்பாஸ்

 

பிக்பாஸ் ஆரி – ரியோ ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் செம சண்டை #பிக்பாஸ்

பிக்பாஸ் சீசன் 4, முந்தைய சீசன்களை விட ரொம்பவே போரடிக்கிறது. அதுவும் 3-ம் சீசனில் சாண்டி அண்ட் கோ காமெடி, பாட்டு என அதகளப்படுத்தியிருந்தார்கள். அதனால், இந்த சீசன் ரொம்ப ஸ்லோவாகச் செல்வதுபோல தோன்றுகிறது.

ஆனால், சமீபத்திய சில வாரங்களாக ஆரியின் சண்டைகளால் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது பிக்பாஸ் பகுதிகள். அந்தச் சண்டை பிக்பாஸ் வீட்டுக்குள் மட்டுமல்ல, வீட்டுக்கு வெளியே ஆரியின் ரசிகர்கள் சோஷியல் மீடியாவிலும் ரகளை செய்து வருகிறார்கள்.

பிக்பாஸ் ஆரி – ரியோ ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் செம சண்டை #பிக்பாஸ்

நேற்றைய எப்பிசோட்டில் இறுதிப்போட்டிக்குச் செல்வதற்கான போட்டி நடத்தப்பட்டது. எல்லோரிடமும் நீர் நிறைந்த பலூன் கொடுக்கப்படும். அதைப் பிடித்தடியே கையை நீட்டியிருக்க வேண்டும். கையை மடக்கவோ, நகர்த்தவோ கூடாது. கீழே ஆணிகள் பொருத்தப்பட்ட பலகை இருந்தது.

அதிக நேரம் பலூனை வைத்திருக்க முடியாதவர்கள் அந்த ஆணி பலகை மீது விட, பலூன் வெடித்து நீர் சிதறும். கடைசி வரை யார் தாக்குப் பிடிக்கிறார்கள் என்பதே போட்டி. இதில் வென்றது பாலா. இரண்டாம் இடம் ரியோ. மூன்றாம் இடம் சோம். நான்காம் இடம் ஆரி.

பிக்பாஸ் ஆரி – ரியோ ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் செம சண்டை #பிக்பாஸ்

ஆனால், ஆரி தனக்கு 3-ம் இடம் வேண்டும் எனச் சண்டைப் போட்டார். அதற்கு காரணம், சோம் கையை வளைத்தார். அதற்குப் பிறகே நான் பலூனை விட்டேன் என்றார். சோம் அதற்கு ‘நீயும் கையை வளைத்தாய்’ என்றதற்கு ‘கையை அப்படி வளைத்திருந்தால் போட்டியை விட்டே விலகுகிறேன்’ என்று சபதம் செய்தார் ஆரி.

இந்த சபதத்தை வெளியே இருப்பவர்கள் தொடர்கிறார்கள். ஆம். இன்று காலை பிக்பாஸ் இன்றைய எப்பிசோட்டுக்கான முதல் ப்ரோமோ வீடியோ விஜய் டிவியின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அந்த வீடியோவின் கமெண்ட் பகுதியில் ஆரி மற்றும் ரியோ ரசிகர்கள் மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டனர்.

பிக்பாஸ் ஆரி – ரியோ ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் செம சண்டை #பிக்பாஸ்

அதில் ரியோ ரசிகர் ஒருவர் ஆரி கையை வளைத்து பலூனைப் பிடித்திருந்த போட்டோவை ஸ்கிரின் ஷார் எடுத்து போட்டு இதற்கு என்ன சொல்கிறீர்கள் என்பதுபோல பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலடியாக ஆரி ரசிகர், ரியோ இடுப்பில் கையை வைத்துக்கொண்டு பலூனைப் பிடித்திருக்கும் படத்தைப் போட்டு திட்டியிருக்கிறார்.

பிக்பாஸ் ஆரி - ரியோ ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் செம சண்டை #பிக்பாஸ்

இவை எல்லாம் வெறும் சாப்பிள்தான். ஆனால், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் ஆரியின் ரசிகர்கள் மற்ற போட்டியாளர்களின் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறார்கள். பாலாவுக்கு பெண் வேடம் போட்டு கிண்டல் செய்துவருகிறார்கள்.

பிக்பாஸ் வீட்டின் சண்டை இப்போது சோஷியல் மீடியா வரை வந்துவிட்டது.