’பச்சை மிளகாயை நான்தான் சாப்பிடுவேன்’ போட்டிப்போட்ட ஷிவானி- பிக்பாஸ்4

 

’பச்சை மிளகாயை நான்தான் சாப்பிடுவேன்’ போட்டிப்போட்ட ஷிவானி- பிக்பாஸ்4

பிக்பாஸ் இந்த சீசனில் பெரிய சுவாரஸ்யங்கள் இல்லை என்பது வெளிப்படையானதுதான். ஆனால், தனி மனிதர்களில் சின்னச் சின்ன குணமாற்றங்களைக் கவனிக்க முடிகிறது. வீரமாக இருந்தவர்கள் சட்டென்று, குழைந்து போவது எப்படி என்ற குழப்பமும் சந்தேகமும் எழுகிறது. ஆனால், வாழ்க்கையில் சில விஷயங்களுக்கு விளக்கங்கள் கிடையாது. ரம்யா இன்று சொன்னதுபோல நாம் தேர்ந்தெடுக்க முடியாத ஹவுஸ்மேட்ஸ்கூடத்தான் இருந்தே ஆகவேண்டும் எனும் நிலையில் என்ன வேண்டுமானாலும் நிகழலாம். அதற்கான சாட்சியாமாக இருந்தது நேற்றைய எப்பிசோட். விளக்கமாகக் கட்டுரையில் பார்ப்போம்.

பிக்பாஸ் 74 நாள்

’பச்சை மிளகாயை நான்தான் சாப்பிடுவேன்’ போட்டிப்போட்ட ஷிவானி- பிக்பாஸ்4

வேக்கப் சாங் இன்று பிரபுதேவாவின் பாடல். அதிகமாக பிரபுதேவாவின் பாடல்கள் ஒலிக்கின்றன. அதற்கான காரணங்கள் இரண்டு இருக்க முடியும். ஒன்று, டான்ஸ் ஆடுவதற்கான வாய்ப்புள்ள பாடலாக அவை இருக்கும். இரண்டு, பாட்டு போடுற பிக்கியின் தம்பி பிரபுதேவா ஃபேனாக இருக்கும்.

கேபி கன்ஃபெக்‌ஷன் ரூம்க்கு அழைத்து, அழ வைக்க ட்ரைப் பண்ணிட்டு இருந்தார். பிக்கிக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்காமல், சட்டென்று அழுது ஆறுதல் கொடுத்தார். பிறந்த நாள் பரிசாக, தன் செல்ல நாயின் கால் தடம் வேண்டும் எனக் கேட்டார். இறுதியாக, பிக்பாஸ் கேபி எனும் பட்டத்தோடு அனுப்பி வைத்தார் பிக்கி. முகமெல்லாம் சிரிப்பு கேபிக்கு.

’பச்சை மிளகாயை நான்தான் சாப்பிடுவேன்’ போட்டிப்போட்ட ஷிவானி- பிக்பாஸ்4

அடுத்து ரம்யாவை உரையாட அழைத்தார் பிக்கி. வழக்கமாகச் சுருக்கமாகப் பேசும் ரம்யா, விரிவாகப் பேசத் தொடங்க, ஒன்லைன் பன்ச் கேட்க முடிவெடுத்தார். ‘நிஜமான அழுகை; பொய்யான அழுகை’ எனச் சொன்னது உண்மை. ஆனால், ப்ரோமோவில் காட்டப்பட்டதுபோல சிறப்பாக இல்லை.

வெளியே, அனிதாவை, ஆரி நியூஸ் வாசிப்பதுபோல பேசச் சொன்னார். அனிதா இந்த சீசன் முழுக்கவே அதுதான்னப்பா பண்ணிட்டு இருக்காங்க. இடையில் தன்னைப் பற்றியும் பெருமை பேசிகிட்டாங்க. அனிதா பேசுவதைப் பார்த்து ‘ஆஹான்’என்பதுபோல லுக் விட்டார் ஷிவானி.

திடீரென்று மாலை 5:30 என்று சொல்லிவிட்டார். கண்டண்டே இல்லாமல் பிக்கி படும் கஷ்டம் சொல்லி மாளாது. சாக்லேட் சாப்பிடும் போட்டி நடத்தினார். டிவியில் பயப்படும் படியான காட்சிகள் ஓட, அதைப் பார்த்துக்கொண்டே சாக்லேட் சாப்பிடணும். கேபி, ஷிவானி, அர்ச்சனா எல்லோரும் அசால்ட்டாகச் சாப்பிட்டு விட, ஏகப்பட்ட டேக் வாங்கினார் ரம்யா. அவ்வளவு பயமா?

’பச்சை மிளகாயை நான்தான் சாப்பிடுவேன்’ போட்டிப்போட்ட ஷிவானி- பிக்பாஸ்4

இந்தப் போட்டியில் ரம்யா டிவியிலிருந்து பார்வையை விலக்க, விலக்க அவரின் அணிக்கு தண்டனைகள் கொடுக்கப்பட்டன. அப்படி ஒரு தண்டனையான மூன்று பச்சை மிளகாய்கள் சாப்பிட வேண்டுமாம். அதற்கு நான் சாப்பிடுறேன்.. நான் சாப்பிடுறேன்… என கேபியும் ஷிவானியும் போட்டிப்போட்டார்கள்.

பாலாவை கன்ஃபெக்‌ஷன் ரூம்க்கு அழைத்தார் பிக்கி. ரொம்ப ஸ்ட்ராங்கான ஆள் என நினைத்த பாலா,  பிக்குக்கு அதிக வேலை வைக்காமல் சட்டென்று அழுதுவிட்டார். ‘உன்னையெல்லாம் ரவுடினு இந்த ஊர் நம்புது’னு பிக்கியின் மைண்ட் வாய்ஸ் ஊருக்கே கேட்டது.

கேப்டன் டாஸ்க்கை அறிவித்தார் பிக்கி. வளைக்குப் பின்னால் இருக்கும் பையை எல்லா துளைகளிலும் கையை விட்டு மேலே கொண்டு வந்து சேர்க்க வேண்டும். 8 பைகளை முதலில் சேர்ப்பவரே கேப்டனாம். உடல் வலிமையைக் கொண்டு செய்யும் டாஸ்க் என்றாலும் அர்ச்சனாவை விட வயது குறைந்த பாலா, ரம்யாவை விட வேகமாகச் செய்து அசத்தினார் அர்ச்சனா.

’பச்சை மிளகாயை நான்தான் சாப்பிடுவேன்’ போட்டிப்போட்ட ஷிவானி- பிக்பாஸ்4

ரியோவின் புதிய படத்தின் பாடல் ரிலீஸ் செய்யப்பட்டது. எல்லோரும் ஹேப்பியோடு டான்ஸ் ஆடினார்கள். இது பாலாவை ரொம்பவே தொந்தரவு செய்திருக்கும் என தோன்றியது. அதன்படியே, எல்லோரையும் அழைத்து, ஆரியிடமும், ரியோவிடம் மன்னிப்பு கேட்டார்.

உண்மையில் பல விஷயங்களை ரியோ முதிர்ச்சியோடு கையாள்கிறார். அனிதா மீது குறை சொல்ல, பல விஷயங்கள் இருந்தும் அதை மறந்து விட்டதாகத் தெரியவில்லை. இதெல்லாம் பேசினால், நமக்கும்தான் கெட்ட பெயர் என விலகியிருக்கிறார் என்பது இந்த சீசனைப் பார்ப்பவர்களுக்குத் தெரியும்.