பைடனின் புதிய குடியேற்ற சட்டம்… இந்தியர்களுக்கு வரப்பிரசாதம்!

 

பைடனின் புதிய குடியேற்ற சட்டம்… இந்தியர்களுக்கு வரப்பிரசாதம்!

அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்றதிலிருந்தே ஜோ பைடன் சீர்திருத்தங்களை மேற்கொண்டுவருகிறார். குறிப்பாக டிரம்ப் ஆட்சியில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிரான நிலைப்பாடுடன் செயல்பட்டுவருகிறார். டிரம்பைப் பொறுத்தவரை அவரின் தீவிர தேசியவாத கொள்கையை உயர்த்திப் பிடித்தார். அதில் குடியேற்ற உரிமை தொடர்பான விவகாரங்களும் அடங்கும். டிரம்பின் நிலைப்பாடு இந்தியர்கள் போன்ற வெளிநாட்டவர்களுக்குப் பெரும் தலைவலியாக இருந்தது.

பைடனின் புதிய குடியேற்ற சட்டம்… இந்தியர்களுக்கு வரப்பிரசாதம்!

இதனைக் கருத்தில்கொண்டு குடியேற்ற கொள்கையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் பரப்புரையின்போதே பைடன் உறுதியளித்திருந்தார். அதனைத் தற்போது நிறைவேற்றும் வகையில் புதிய குடியேற்ற மசோதாவிற்குப் பைடன் ஒப்புதல் அளித்தார். அமெரிக்க குடியுரிமை சட்டம் 2021 இரு தினங்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டம் அமலாகும் பட்சத்தில் ஒவ்வொரு நாட்டிற்கும் குறிப்பிட்ட பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடு நீக்கப்படும். அதேபோல வேலை அடிப்படையில் கிரீன் கார்டு வழங்குவது அறிமுகம் செய்யப்படுகிறது.

பைடனின் புதிய குடியேற்ற சட்டம்… இந்தியர்களுக்கு வரப்பிரசாதம்!

இதன்மூலம் அமெரிக்காவில் தொழில் நிமித்தமாக குடியேறியுள்ள ஆயிரக்கணக்கான இந்தியாவைச் சேர்ந்த ஐடி ஊழியர்கள் பயன்பெறுவார்கள். 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிரீன் கார்டுக்காக காத்திருப்போருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கவும் இச்சட்டம் வழிகோலுகிறது. ஹெச்1 பி விசாதாரர்களுக்கு பணி அங்கீகாரம் வழங்குவதும் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது.