Home விளையாட்டு கிரிக்கெட் கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமாருக்கும் மனைவிக்கும் கொரோனா அறிகுறி!

கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமாருக்கும் மனைவிக்கும் கொரோனா அறிகுறி!

கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் தற்போது படிபடியாக இறங்கி வருகிறது. 4 லட்சம் வரை சென்ற தொற்று பாதிப்பு 2 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தான் இரண்டாம் அலை முடிவடையும் என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். இந்த இரண்டாம் அலையில் பல்வேறு அரசியல்வாதிகளும் திரைப்பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் பலரும் பாதிக்கப்படுகின்றனர். ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் தான் ஐபிஎல் தொடரே பாதியில் நிறுத்திவைக்கப்பட்டது.

கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமாருக்கும் மனைவிக்கும் கொரோனா அறிகுறி!
Bhuvneshwar Kumar And His Wife in Quarantine After Displaying COVID-19  Symptoms

தற்போது இந்தியாவின் மிக முக்கிய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான புவனேஸ்வர் குமாருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மனைவியான நுபுருக்கும் அறிகுறிகள் தென்பட்டிருக்கின்றன. இருவரும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இதற்கு முன்பு மே 21ஆம் தேதி புவனேஸ்வரின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. அவரது தந்தை சமீபத்தில் புற்றுநோயால் உயிரிழந்தார்.

Bhuvneshwar Kumar's wife Nupur Nagar names her favourite cricketer apart  from her husband

கொரோனா பரவல் காரணமாக இரண்டு செட் அணிகளாக பிசிசிஐ பிரித்துள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்களைக் கொண்ட ஒரு அணி நியூஸிலாந்துடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுகிறது. மற்றொரு அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதில் முழுக்க முழுக்க இளம் வீரர்களைக் கொண்ட அணியாக இருக்கும். ஓரிரு மூத்த வீரர்கள் மட்டுமே இருப்பர். அதில் புவனேஸ்வர் குமாரும் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இச்சூழலில் தான் அவருக்கு கொரோனா இருப்பதாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமாருக்கும் மனைவிக்கும் கொரோனா அறிகுறி!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“கணவனை கொலை செய்வது எப்படி”-கூகுளில் தேடிய மனைவி -கணவனுக்கு நேர்ந்த கொடுமை

கூகுள் மூலம் கணவனை கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர் . மத்திய பிரதேசத்தின் ஹர்தா மாவட்டத்தில் உள்ள கெதிபூர்...

இந்தியாவிலேயே முதன்முறையாக… அழிந்துவரும் மரங்களை பாதுகாக்க “மர அறுவைச் சிகிச்சை நிபுணர்கள்”

மக்களையும் பூமியையும் காப்பாற்றுவதற்குகு கிடைத்த மிக முக்கியமான ஆயுதம்தான் மரம். மனிதனுக்கு உயிர் எந்தளவு முக்கியமோ, அதேபோல் அந்த மனிதன் வாழ்வதற்கு மரமும் முக்கியம். ஆனால் அந்த மரங்களைப் போற்றி...

“தடைகளை உடை… சரித்திரம் படை” – ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற உலகின் முதல் திருநங்கை!

மனித சமூகத்தில் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களிலும் ஒடுக்கப்பட்டவர்களாக திருநங்கைகள் இருக்கிறார்கள். இந்த தொழில்நுட்ப யுகத்தில் கூட அவர்கள் மீதான சமூகத்தின் பார்வை கோரமாகவே இருக்கிறது. சமூகத்தின் கடைநிலையில் இருக்கும் அவர்களுக்கு அடிப்படை...

நான் துருவித்துருவி பார்த்தேன்; எனக்கு எதுவும் தென்படவில்லை – ஆளுநர் உரை குறித்து ஓபிஎஸ் அடித்த கமெண்ட்

திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட முக்கியமான திட்டங்கள்,கொள்கைகள் ஆளுநர் உரையில் இடம் பெறாததை பார்க்கையில் வாக்குறுதிகள் எல்லாம் ஆட்சிக்கட்டிலில் அமருவதற்காக அள்ளிவீசப்பட்டவையோ என்ற எண்ணம் மக்களிடையே ஏற்படுகிறது. மொத்தத்தில் இது...
- Advertisment -
TopTamilNews