உங்க ஆட்சியில் விவசாயிகளின் வருமானம் ஏன் அதிகரிக்கவில்லை?.. காங்கிரஸை தாக்கிய பா.ஜ.க. எம்.பி..

 

உங்க ஆட்சியில் விவசாயிகளின் வருமானம் ஏன் அதிகரிக்கவில்லை?.. காங்கிரஸை தாக்கிய பா.ஜ.க. எம்.பி..

மாநிலங்களவையில், உங்க ஆட்சியில் விவசாயிகளின் வருமானம் ஏன் அதிகரிக்கவில்லை என்று காங்கிரஸ் உறுப்பினர்களை பா.ஜ.க. எம்.பி. கேள்வியால் தாக்கினார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா மற்றும் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகிய மசோதாக்களை தாக்கல் செய்தார். அந்த மசோதாக்களுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த மசோதாக்களை ஆதரித்து பா.ஜ.க. எம்.பி. பூபேந்தர் யாதவ் பேசுகையில் கூறியதாவது:

உங்க ஆட்சியில் விவசாயிகளின் வருமானம் ஏன் அதிகரிக்கவில்லை?.. காங்கிரஸை தாக்கிய பா.ஜ.க. எம்.பி..
பூபேந்தர் யாதவ்

நாடு சுதந்திரம் அடைந்தபோது, நகர்ப்புறம் மற்றும் கிராமபுறங்களில் வருமான விகிதம் 2:1ஆக இருந்தது. துரதிருஷ்டவசமாக, உங்க (காங்கிரஸ்) கட்சி கொண்டு வந்த கொள்கைகளால் இன்று நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வருமான விகிதம் 7:1 உள்ளது. இந்த கிராமப்புற வருமானம் ஏன் குறைந்தது என்று நீங்கள் பதில் சொல்ல வேண்டும். வேளாண் துறை சாதனை படைத்தபோது கடின உழைப்பாளிகளான விவசாயிகளின் சம்பளம் ஏன் அதிகரிக்கவில்லை என்று உங்களிடம் கேள்வி கேட்க விரும்புகிறேன்.

உங்க ஆட்சியில் விவசாயிகளின் வருமானம் ஏன் அதிகரிக்கவில்லை?.. காங்கிரஸை தாக்கிய பா.ஜ.க. எம்.பி..
காங்கிரஸ்

விவசாயிகள் 70 ஆண்டுகள் நீதிக்காக காத்திருக்கிறார்கள். இந்த மசோதாக்கள் வேளாண் துறையில் சீர்த்திருத்தங்களை கொண்டு வரும். நாம் பல பயிர்களை நாம் சாகுபடி செய்கிறோம் ஆனால் நம்மிடம் உலகின் உணவுபதப்படுத்துதல் வசதியில் 5 சதவீதம் மட்டுமே உள்ளது ஏன் என்று நாம் சிந்திக்க வேண்டும். வேளாண் துறையில் மதிப்பு கூட்டுதல் செய்வதற்கும் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. வேளாண் துறையில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யவதை மத்திய அரசு இலக்காக கொண்டு, அதை நோக்கி உழைத்தது. நாம் அடிப்படை கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம், பாசன அமைப்பை மேம்படுத்தியுள்ளோம், உள்கட்டமைப்பு, மேம்பட்ட நீர்ப்பாசன முறைகள் மற்றும் விவசாயிகளுக்கு உதவியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.