3 மாதத்தில் ரூ.893 கோடி நஷ்டத்தை சந்தித்த பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்

3 மாதத்தில் ரூ.893 கோடி நஷ்டத்தை சந்தித்த பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்

2020 ஜூன் காலாண்டில் பி.எச்.இ.எல். நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் ரூ.893.14 கோடியை நிகர இழப்பாக சந்தித்துள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (பி.எச்.இ.எல்.) தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் பி.எச்.இ.எல். நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் ரூ.893.14 கோடியை நிகர இழப்பாக சந்தித்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் அந்நிறுவனத்தின் நஷ்டம் சுமார் 4 மடங்குக்கு மேல் அதிகமாகும்.

3 மாதத்தில் ரூ.893 கோடி நஷ்டத்தை சந்தித்த பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்
பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்

2020 ஜூன் காலாண்டில் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.2,086.43 கோடியாக குறைந்துள்ளது. கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் குழுமத்தின் செயல்பாடுகள் மற்றும் காலாண்டுக்கான நிதி முடிவுகளில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

3 மாதத்தில் ரூ.893 கோடி நஷ்டத்தை சந்தித்த பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்
பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்

2019 ஜூன் காலாண்டில் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் ரூ.218.93 கோடியை நிகர நஷ்டமாக சந்தித்து இருந்தது. மேலும், அந்த காலாண்டில் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனம் மொத்த வருவாயாக ரூ.4,673.38 கோடி ஈட்டியிருந்தது.