பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

 

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப் பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 2 ஆயிரத்து 604 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95.58 அடியாக உயர்ந்துள்ளது. மேலும், அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 100 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு ஆயிரத்து 500 கனஅடியும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

இதனிடையே, ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக பெய்து வரும் மழையால் முக்கிய நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன்படி, குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 36 ஆடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.59 அடியாகவும் உயர்ந்துள்ளது. மேலும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 14.10 அடியாக உயர்ந்துள்ள நிலையில், அணைக்கு வினாடிக்கு 15 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.