மீண்டும் லாப பாதைக்கு திரும்பிய ஏர்டெல்… டிசம்பர் காலாண்டில் ரூ.853.6 கோடி லாபம் பார்த்த ஏர்டெல்..

மீண்டும் லாப பாதைக்கு திரும்பிய ஏர்டெல்… டிசம்பர் காலாண்டில் ரூ.853.6 கோடி லாபம் பார்த்த ஏர்டெல்..

பார்தி ஏர்டெல் நிறுவனம் 2020 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.853.6 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் 2வது மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமான பார்தி ஏர்டெல் தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவனம் 2020 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.853.6 கோடி ஈட்டியுள்ளது. 2020 செப்டம்பர் காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு ரூ.763.2 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது.

மீண்டும் லாப பாதைக்கு திரும்பிய ஏர்டெல்… டிசம்பர் காலாண்டில் ரூ.853.6 கோடி லாபம் பார்த்த ஏர்டெல்..
பார்தி ஏர்டெல்

சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் விவகாரத்தால் முந்தைய 4 காலாண்டுகளிலும் பார்தி ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 2020 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.26,517 கோடி ஈட்டியுள்ளது. இது 2020 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 5.8 சதவீதம் அதிகமாகும்.

மீண்டும் லாப பாதைக்கு திரும்பிய ஏர்டெல்… டிசம்பர் காலாண்டில் ரூ.853.6 கோடி லாபம் பார்த்த ஏர்டெல்..
பார்தி ஏர்டெல்

கடந்த டிசம்பர் காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு பயனாளர் வாயிலான சராசரி வருவாய் 2.4 சதவீதம் அதிகரித்து ரூ.166ஆக உயர்ந்துள்ளது. அந்த காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஒட்டு மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 4.1 சதவீதம் உயர்ந்து 45.79 கோடியாக அதிகரித்துள்ளது.