மலைபோல் குவிந்த வருவாய்… ஆனாலும் கடைசியில் நஷ்டம்தான்.. தொடரும் பார்தி ஏர்டெல் சோகம்..

மலைபோல் குவிந்த வருவாய்… ஆனாலும் கடைசியில் நஷ்டம்தான்.. தொடரும் பார்தி ஏர்டெல் சோகம்..

பார்தி ஏர்டெல் நிறுவனம் 2020 செப்டம்பர் காலாண்டில் ரூ.763.2 கோடியை நிகர இழப்பாக சந்தித்துள்ளது.

தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவனம் 2020 செப்டம்பர் காலாண்டில் ரூ.763.2 கோடியை நிகர இழப்பாக சந்தித்துள்ளது. இருப்பினும் இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் குறைவாகும். 2019 செப்டம்பர் காலாண்டில் பார்தி ஏர்டெல் நிகர இழப்பாக ரூ.23,044.90 கோடியை சந்தித்து இருந்தது.

மலைபோல் குவிந்த வருவாய்… ஆனாலும் கடைசியில் நஷ்டம்தான்.. தொடரும் பார்தி ஏர்டெல் சோகம்..
பார்தி ஏர்டெல்

2020 செப்டம்பர் காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருவாய் ரூ.25,785 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2019 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 22 சதவீதம் அதிகமாகும். மொபைல் சந்தாதாரர் வாயிலான சராசரி வருவாய் ரூ.162ஆக அதிகரித்துள்ளது. இது 2019 செப்டம்பர் காலாண்டில் ரூ.128ஆக இருந்தது.

மலைபோல் குவிந்த வருவாய்… ஆனாலும் கடைசியில் நஷ்டம்தான்.. தொடரும் பார்தி ஏர்டெல் சோகம்..
கோபால் விட்டல்

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் இந்தியா அண்டு தெற்காசியாவின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான கோபால் விட்டல் நிதி நிலை முடிவு குறித்து கூறுகையில், பொதுவான பலவீனமான காலாண்டாக இருந்தபோதிலும், வருவாயில் சுமார் 22 சதவீதத்தை அதிகரித்து வலுவான செயல்திறனை அதிகரித்துள்ளோம். மொபைல் பிரிவில் புதிதாக சுமார் 1.4 கோடி 4ஜி வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளோம் என தெரிவித்தார்.