தொடர்ந்து நஷ்டத்தை தவிர்க்க போராடும் பார்தி ஏர்டெல்…. 3 மாசத்துல ரூ.5,237 கோடி நஷ்டமாம்….

 

தொடர்ந்து நஷ்டத்தை தவிர்க்க போராடும் பார்தி ஏர்டெல்…. 3 மாசத்துல ரூ.5,237 கோடி நஷ்டமாம்….

நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான விளங்குகிறது பார்தி ஏர்டெல். இந்நிறுவனம் சமீபகாலமாக தொடர் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. 2019 செப்டம்பர் காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.24,513.50 கோடியை நிகர இழப்பாக சந்தித்து இருந்தது. அதற்கு அடுத்த காலாண்டிலும் (2019 டிசம்பர் காலாண்டு) ஏர்டெலுக்கு ரூ.3,388.10 கோடி நிகர நஷ்டம் ஏற்பட்டது.

தொடர்ந்து நஷ்டத்தை தவிர்க்க போராடும் பார்தி ஏர்டெல்…. 3 மாசத்துல ரூ.5,237 கோடி நஷ்டமாம்….

இந்நிலையில் பார்தி ஏர்டெல் கடந்த மார்ச்  காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 மார்ச் காலாண்டிலும் நஷ்டத்தையே ஏர்டெல் நிறுவனம் சந்தித்துள்ளது. அந்த காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.5,237 கோடியை நிகர இழப்பாக சந்தித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் கடுமையான போட்டி மற்றும் உரிம கட்டணம் மற்றும் அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணங்களை வழங்குவதற்கான வட்டி செலவினம் உள்ளிட்ட சில விதிவிலக்கான உருப்படிகளை சேர்த்தல் போன்றவற்றால் பார்தி ஏர்டெல் தொடர்ந்து இடர்பாடான நிலையில் உள்ளதாக தெரிகிறது.

அதேசமயம் கடந்த மார்ச் காலாண்டில் சுனில் மிட்டல் தலைமையிலான ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் 15 சதவீதம் அதிகரித்து ரூ.23,723 கோடியாக உயர்ந்துள்ளது. சென்ற நிதியாண்டின் இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.20,602 கோடியாக இருந்தது. 2020 மார்ச் காலண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு வாடிக்கையாளர் வாயிலான சராசரி வருவாய் ரூ.123லிருந்து ரூ.154ஆக உயர்ந்துள்ளது. 2020 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி ஒட்டுமொத்த நிகர கடன் (லீஸ் பொறுப்புகளை தவிர்த்து) ரூ.88,251 கோடியாக உள்ளது.