நல்ல முடிவு எடுத்துள்ளீர்கள் ரஜினி… “தலைவா ஐ லவ் யூ!”- ரஜினிகாந்த்

 

நல்ல முடிவு எடுத்துள்ளீர்கள் ரஜினி… “தலைவா ஐ லவ் யூ!”- ரஜினிகாந்த்

ஆன்மீகத்தின் உச்சத்தில் நீங்கள் வெற்றி பெற்று உள்ளீர்கள் என்றும் நல்ல முடிவு எடுத்துள்ளீர்கள் எனவும் இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாரதிராஜா வெளியிட்டுள்ள வீடியோவில், “மக்களே! உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா… இன்று ஒரு மிக பிரளயமாக, பூகம்பமாக ஒரு விஷயம் வெளியாகியிருக்கிறது. ரஜினி அரசியலுக்கு இப்ப வருவார் அப்ப வருவார் எப்ப வேணாலும் வருவார் இதோ வந்துவிட்டார். சொல்லி ஒரு தேதியும் நிர்மானித்து இந்த தேதியில் கட்சியை அறிவிக்கிறார் என தகவல்கள் வெளியானது.

Bharathiraja says Rajini has separate power || "ரஜினிக்கு தனி 'பவர்'  உள்ளது" பாரதிராஜா

அரசியல் எனக்கு உடன்பாடு இல்லை என ரஜினிகாந்திடம் ஒரு நண்பராக சண்டை போட்டிருக்கிறேன். ரஜினிக்கு இனிமேல் ஒரு உச்சம் தேவையில்லை. உச்சிக்கு மேல் உச்சம் இல்லை. என் நண்பன் ரஜினிக்கு இமயமலையை விட ஒரு உச்சி இல்லை. அவர் பணம், புகழ் பெயர் என அனைத்திலும் உச்சியில் இருக்கிறார். இதுக்குமேல சிகரத்தில் ஏற இடமில்லை. ரஜினி கட்சி ஆரம்பிக்கிறேன் என சொல்லும்போது எனக்கு அதில் உடன்பாடு இல்லை, உன் பாதங்கள் புனித நீரில் நடந்து வந்தவை புழுதியில் உன் கால் பதிய வேண்டுமா? என கேட்டேன் அது அவருக்குத் தெரியும். இதெல்லாம் முடிந்து காலச்சக்கரம் சுழன்றது.

அரசியல் சூதாட்ட காய் நகர்த்திக் கொண்டிருந்தது. என் உழைப்பால் நான் வாழ்ந்தேன், நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன், என் உழைப்பில் வந்த ஊதியத்தில் இவர்கள் என்னை புதைக்க முடியும், இதை நான் ரஜினியிடம் நிறைய முறை சொல்லியிருக்கிறேன். எஸ்பிபி என்ற நண்பனை இழந்த வலி எனக்கு தான் தெரியும். ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என அறிந்து வேதனைப்பட்டேன். அவரிடம் பேசினேன். உன் வலியும் வேதனையும் உனக்கு மட்டுமே தெரியும். எப்பவுமே தலைவா எனவே அவரை நான் கூப்பிடுவேன். நீ எட்டாத உயரம் இல்லை. உனக்கு இந்த அரசியல் தேவையா? மன நிம்மதி வேண்டும்.

ஒரே ஒரு பிறப்பு தான் இந்தப் பிறப்பில் கடவுள் உனக்கு அத்தனையும் கொடுத்திருக்கிறார். நீ ஒரு ஆன்மீகவாதி, கடவுள் உனக்கு எல்லா கிரகங்களையும் கொடுத்திருக்கிறார். இதற்கு மேல் நீ எங்கே செல்ல வேண்டும. என் நண்பன் ரஜினி என் என்ன முடிவு எடுப்பார் என தெரியாமல் இருந்தது. அவர் அரசியல்வாதியாக பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. கடைசி வரை எனக்கு நண்பனாக இருக்க வேண்டும். ரஜினி முடிவு எடுப்பது சாதாரண விஷயம் இல்லை. பெருமைப்படுகிறேன் இந்த முடிவை பார்த்து.. ரஜினி எடுத்த முடிவு சரியான முடிவு.

நல்ல முடிவு எடுத்துள்ளீர்கள் ரஜினி… “தலைவா ஐ லவ் யூ!”- ரஜினிகாந்த்

ரசிகர்கள் அனைவரும் உங்கள் உடல்நிலை தான் முக்கியம் என நினைத்தனர் ரஜினியின் உடல்நிலை தான் முக்கியம், அவர் உயிர் முக்கியம் என ரசிகர்கள் கூறினார். ஒரு ரசிகர் கூட எங்களை ஏமாற்றி விட்டீர்கள் என கூறவில்லை. ஆன்மீகத்தின் உச்சத்தில் ஜெயித்து விட்டாய். ஐ லவ் யூ. நீ எந்த மொழிக்கும் சொந்தக்காரர் அல்ல, தமிழக மக்கள் உன்னை விரும்பினால் நீ மராட்டியன் அல்ல. கன்னடம் காரர் அல்ல, நீ தமிழன் தான். நான் முதலமைச்சராக வர மாட்டேன் என ஒரு முறை நீ சொன்னாய். அது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. உன் உடல்நிலை சரியாக வேண்டும் என பிரார்த்தனை செய்கிறோம். அரசியல் ஒரு சாக்கடை. தனித்த முடிவெடுப்பதில் தலைவன் முரட்டுத் தனத்தில் எடுத்த முடிவை வரவேற்கிறேன்! யார் என்ன சொன்னாலும் கேட்காதே… நீ முக்கியம் உன் உயிர் முக்கியம்” என தெரிவித்துள்ளார்.