ஆகஸ்ட் 15-க்குள் கொரோனா தடுப்பூசி! – ஐ.சி.எம்.ஆர் இலக்கு

 

ஆகஸ்ட் 15-க்குள் கொரோனா தடுப்பூசி! – ஐ.சி.எம்.ஆர் இலக்கு

வருகிற ஆகஸ்ட் 15க்குள் கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான பணிகளை விரைவுபடுத்தும்படி ஐ.சி.எம்.ஆர் உத்தரவிட்டுள்ளது.

ஆகஸ்ட் 15-க்குள் கொரோனா தடுப்பூசி! – ஐ.சி.எம்.ஆர் இலக்குஉலகம் முழுவதும் கொரோனாவைத் தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. பல தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் தோல்வியில் முடிந்த நிலையில், இந்தியாவின் பாரத்பயோடெக் நிறுவனம் தயாரித்த மருந்து நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்துள்ளனர்.

ஆகஸ்ட் 15-க்குள் கொரோனா தடுப்பூசி! – ஐ.சி.எம்.ஆர் இலக்குஇந்த நிலையில் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கொரோனா தடுப்பு மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டுவந்து மக்கள் அனைவருக்கும் அளிக்கும் வகையில் பணிகளை விரைவுபடுத்தும்படி பாரத்பயோடெக் நிறுவனத்தை ஐசிஎம்ஆர் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கான பணிகளை ஜூலை 7ம் தேதிக்குள் தொடங்கவும் அது உத்தரவிட்டுள்ளது.

ஆகஸ்ட் 15-க்குள் கொரோனா தடுப்பூசி! – ஐ.சி.எம்.ஆர் இலக்குகொரோனா தடுப்பூசி வந்துவிட்டால் கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்புகளை தடுத்துவிடலாம். உலகுக்கு இந்தியா ஒளியாக விளங்குகிறது என்பது மீண்டும் ஒரு முறை உறுதி செய்யப்படும்.