விமர்சனங்களை தாண்டி.. தஞ்சாவூரில் பாஜக உண்ணாவிரத அறப்போராட்டம்

 

விமர்சனங்களை தாண்டி.. தஞ்சாவூரில் பாஜக  உண்ணாவிரத அறப்போராட்டம்

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை கைவிட கோரி பாஜகவின் உண்ணாவிரத அறப்போராட்டம்,தஞ்சாவூரில் நடைபெற்று வருகிறது.

விமர்சனங்களை தாண்டி.. தஞ்சாவூரில் பாஜக  உண்ணாவிரத அறப்போராட்டம்

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தஞ்சாவூரில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் பனகல்புலி அருகில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் காலையில் தொடங்கியது. மாலை 5 மணிக்கு முடிய விருக்கிறது.

விமர்சனங்களை தாண்டி.. தஞ்சாவூரில் பாஜக  உண்ணாவிரத அறப்போராட்டம்

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி. ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், எச். ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலரும் பங்கேற்றுள்ள இந்த உண்ணாவிரத போராட்டத்தில் டெல்டா விவசாயிகள் பங்கேற்று உள்ளனர். மேலும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

விமர்சனங்களை தாண்டி.. தஞ்சாவூரில் பாஜக  உண்ணாவிரத அறப்போராட்டம்

கர்நாடகத்தில் பாஜக ஆட்சிதான் நடக்கிறது மத்தியிலும்பாஜக ஆட்சிதான் நடக்கிறது. அதனால் பாஜக நினைத்தால் உடனே மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்திவிடலாம். அந்த அதிகாரம் இருக்கிறது. அப்படி இருந்தும் பாஜகவின் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது மக்களை ஏமாற்றும் செயல் என்று பாஜகவின் போராட்டத்திற்கு எதிர்க்கட்சியினர் விமர்சனம் தெரிவித்துள்ள நிலையில் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு முன்பே அழித்து அறிவித்திருந்தார் அண்ணாமலை.

அப்போது கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் பசவராஜ் பொம்மை, அண்ணாமலை உண்ணாவிரதம் இருந்தால் மட்டுமல்ல யார் உண்ணாவிரத போராட்டம் நடத்தினாலும் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று அடித்துச் சொல்லியிருந்தார். ஆனாலும் போராட்டத்தினை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர் தமிழக பாஜகவினர்