“இனி கத்தரிக்காய் சாப்பிட்டா போதை வருமோ “-காய்கறிக்குள் கஞ்சா கடத்தல் ..

 

“இனி கத்தரிக்காய் சாப்பிட்டா போதை வருமோ “-காய்கறிக்குள் கஞ்சா கடத்தல் ..

கர்நாடகாவில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 4 கோடி மதிப்புள்ள 1350 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் .

கர்நாடகாவின் வடக்குப் பகுதியில் பெங்களூரிலிருந்து சுமார் 750 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கலபுராகி மாவட்டத்தில் கமலாப்பூர் தாலுகாவில் அமைந்துள்ள செம்மறி ஆடு வளர்ப்பு பண்ணையில் ஒரு பெரிய பள்ளத்திற்குள் 4 கோடி ருபாய் மதிப்புள்ள 1350 கிலோ கஞ்சாவை போலீசார் அதிரடி ரெய்டு செய்து கண்டுபிடித்தார்கள் .
கர்நாடக ,ஒடிஷா ,தெலுங்கானா ஆகிய மூன்று மாநில எல்லையில் போதை தடுப்பு போலீசார் அதிரடி சோதனை வியாழக்கிழமை நடத்தியபோது இரண்டு கிலோ கஞ்சா கடத்திய ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர் சொன்ன தகவல் போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது .அவரின் கூற்றுப்படி ,ஒடிசாவில் காடுகளில் பயிடப்பட்டு விளைந்து வந்த கஞ்சாவை அங்கிருந்து தெலுங்கானா கர்நாடக மாநிலங்களுக்கு காய்கறிகளை ஏற்றிச்செல்லும் மூட்டைக்குள் வைத்து கடத்தி சென்று அங்கு விநியோகிக்கப்படுவதாகவும் ,இன்னும் சிலர் காய்கறிக்குல்லேயே வைத்து, தைத்து கஞ்சாவை கடத்துவதாகவும் ,இப்படி கடத்தி வரப்படும் கஞ்சாவை செம்மறி ஆட்டு பண்ணையில் ஒரு குழி வெட்டி ஆடுகளுக்கு நடுவே ஒளித்து வைத்திருப்பதாவும் அவர் கூறிய இடங்களில் போலீசார் சோதனை நடத்தி 1350 கிலோ கஞ்ஜாவை ரெய்டு நடத்தி பறிமுதல் செய்தனர் .இதன் பேரில் நான்கு பேரையும் போதை பொருள் போலீசார் கைது செய்துள்ளார்கள் .

“இனி கத்தரிக்காய் சாப்பிட்டா போதை வருமோ “-காய்கறிக்குள் கஞ்சா கடத்தல் ..